முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸ்திரேலியாவில் வெள்ளம்: வீடுகளை காலி செய்ய உத்தரவு

ஞாயிற்றுக்கிழமை, 4 மார்ச் 2012      உலகம்
Image Unavailable

 

சிட்னி, மார்ச் - 4 - ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி மற்றும் நியூ சவுத் வேல்ஸ் மாகாணங்களில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருப்பதால்  ஆயிரக்கணக்கான மக்களை அப்பகுதியில் இருந்து  வெளியேறும்படி  அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி மற்றும் நியூ சவுத் வேல்ஸ் மாகாணங்களில் கடந்த  சில நாட்களாக பலத்த மழை கொட்டிக்கொண்டிருக்கிறது. இதனால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் ஆறுகளில் ஆங்காங்கே உடைப்புகள் ஏற்பட்டு வெள்ள நீர் ஊருக்குள் புகுந்துள்ளது. பல இடங்களில்  வீடுகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. மேலும் மழை நீடிக்கும் என்பதாலும்  வெள்ளப்பெருக்கு அதிகரிக்கும் என்பதாலும்  3,500 வீடுகளை காலி செய்து பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

மழை பெய்து வரும் இந்த பகுதிகளில் 75 சதவீதம் பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன.  வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கவும்  நிவாரண பணிகளை கவனிக்கவும்  அரசு அதிகாரிகள் முடுக்கி விடப்பட்டுள்ளனர். கடந்த 14 ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவுக்கு  பலத்த மழை பெய்து வருவதாக அதிகாரிகள் கூறினர். இது வரை இந்த பகுதிகளில் மட்டும் 200 மி.மீ. மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்  தெரிவித்துள்ளது. இந்த வெள்ளத்தின் காரணமாக பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்