முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மருத்துவப் படிப்பு தேர்வுகளுக்கு புதியமதிப்பீட்டு முறை: டாக்டர் மயில்வாகனன் தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 4 மார்ச் 2012      தமிழகம்
Image Unavailable

சென்னை, மார்ச் - 4 - எம்.பி.பி.எஸ். உள்ளிட்ட அனைத்து மருத்துவப் படிப்புகளுக்கும் அடுத்த ஆண்டு முதல் புதிய தேர்வு மதிப்பீட்டு முறை அறிமுகப்படுத்தப்படும் என தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் மயில்வாகனன் நடராஜன் கூறினார். சென்னையில் செய்தியாளர்களுக்கு  அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:- இருபத்தைந்து ஆண்டு காலமாக மருத்துவ தேர்வு முறையிலும் மதிப்பீட்டு முறையிலும் எந்த மாற்றமும் செயப்படவில்லை. கால மாற்றத்துக்கு ஏற்ப மருத்துவக் கல்வியை மேம்படுத்த புதிய மாற்றங்கள் செய்ய வேண்டியது அவசியமாகிறது. அந்த அடிப்படையில் மருத்துவக் கல்வியின் தரத்தை உயர்த்தும் வகையில் கடந்த ஆண்டு மருத்துவ படிப்பு தேர்வு மதிப்பீட்டு முறையில் புதிய விதிகள் அமல்படுத்தப்பட்டன. புதிய மதிப்பீட்டு முறைக்கு மாணவர்கள் பழக்கப்படாததால் பலர் தோல்வியடைய நேரிட்டது. அதைத் தொடர்ந்து புதிய மதிப்பீட்டு முறையை எதிர்த்து சென்னை உயர் nullநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். புதிய முறைக்கு அனுமதி கோரி, பல்கலைக்கழகம் சார்பில் அகில இந்திய மருத்துவ கவுன்சில்களுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. புதிய தேர்வு மதிப்பீட்டு முறைக்கு அனுமதி அளித்து பல் மருத்துவ கவுன்சிலிடம் இருந்து இப்போது கடிதம் வந்துள்ளது. இந்திய மருத்துவ கவுன்சில் உள்பட பிற மருத்துவ கவுன்சில்களும் புதிய மதிப்பீட்டு முறைக்கு அனுமதி அளிக்கும் என எதிர்பார்க்கிறோம். புதிய மதிப்பீட்டு முறை குறித்து முன்கூட்டியே மாணவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்ற அவசியமில்லை. மருத்துவக் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடனே பல்கலைக்கழகம் இந்த முடிவுகளை மேற்கொண்டது என்றார் டாக்டர் மயில்வாகனன் நடராஜன்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்