முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிறிஸ்தவத்திற்கு விரோதமாக செயல்படும் உதயகுமார் கிறிஸ்தவர்களை கேடயமாக பயன்படுத்துவதா?

திங்கட்கிழமை, 5 மார்ச் 2012      தமிழகம்
Image Unavailable

 

மதுரை,மார்ச்.- 5 - கூடன்குளம், அணுமின் நிலைய எதிர்ப்பு குழு தலைவர் உதயகுமார், கிறிஸ்தவ மத கோட்பாடுகளுக்கு எதிராக செயல்பட்டு கிறிஸ்தவர்களை கேடயமாக பயன்பாடுத்தி மக்களை ஏமாற்றி வருவதாக மதுரை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர் எஸ்.ஜெ.சைமன்  பல்தேசிங் தனது அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் தனது அறிக்கையில் கூறுகையில், உலகம் முழுவதும் பரந்து விரிந்துள்ள கிறிஸ்தவ மதத்தின் முக்கிய கொள்கையே அன்பை அடிப்படையாகக் கொண்டது. தேவன் அன்பாகவே இருக்கிறார் என்கிறது பரிசுத்வேதாகமம் இந்த அன்பு சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் விசுவாசிக்கும் சகலத்தையும் நம்பும், சகலத்தையும சகிக்கும் என்று 1 கொரிந்தியர் 13-ம் அதிகாரம் 7 -ம் வசனத்தில் குறிப்பிட்டுள்ளது. ஆனால், சகோதர் உதயகுமாரோ, நியாயமான கருத்துக்களையும், விமர்சனங்களையும் கூட ஏற்றுக்கொள்ளக்கூடிய மனப்பக்குவம் இன்றி, எதற்கெடுத்தாலும் உணர்ச்சி வசப்பட்டு கிறிஸ்தவ மக்களை குழப்புகின்ற வகையில் செயல்பட்டு வருகிறார். இயேசு கிறிஸ்துவின் முக்கியமான போதனைகளில் ஒன்று, உங்களை சபிக்கிறவர்களை ஆசிர்வதியுங்கள், உங்களை நிந்திக்கிறவர்களுக்காக ஜெபம் பண்ணுங்கள் கிறிஸ்தவ மறைநூலாம் பரிசுத்த வேதாகமத்திற்கு எதிராக செயல்படும் உதயக்குமார் குழுவினரோ -தங்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்காத மக்களையும், மத்திய மாநில அரசுகளையும், அணுமின் நிலைய ஊழியர்களையும், அரசியல் கட்சியினரையும் மிரட்டி  வருவதோடு அவ்வப்போது வன்முறையிலும் ஈடுபட்டு வருகின்றனர். 

ஆரம்பத்தில் மத்திய நிபுணர் குழுவை குறைசொல்லி வந்த இவர்கள், தற்போது தமிழக அரசின் நிபுணர்குழுவையும் வசைபாடி வருகின்றனர். இடிந்த கரை மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் உள்ள பொதுமக்களின் அறியாமையை பயன்படுத்துக் கொண்டு அவர்களது அன்றாடத் தேவைகளை பூர்த்தி செய்வதாக கூறி மக்களை ஏமாற்றி விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். சகோதரர் உதயக்குமாருக்கும் அவரது குழுவினரும் தங்களது தேசவிரோத மற்றும் கிறிஸ்துவதற்கு எதிராக நடவடிக்கைகளை நிறுத்திக்கொண்டு அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். தவறும் பட்சத்தில் இறைகோபத்திற்கு ஆளாவதுடன், மத்திய மாநில அரசுகளின் கடுமையான சட்ட நடவடிக்கைகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கிறோம். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்