முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முத்தரப்பு தொடர்: ஆஸ்திரேலியா கோப்பையை வெல்லுமா?

செவ்வாய்க்கிழமை, 6 மார்ச் 2012      விளையாட்டு
Image Unavailable

 

அடிலெய்டு, மார்ச். 6 - முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடர் போட்டியில் அடிலெய்டு நகரில் இன் று நடக்க இருக்கும் 2 -வது இறுதிச் சுற் றுப் போட்டியில் கோப்பையைக் கை ப்பற்ற ஆஸ்திரேலியா மற்றும் இலங் கை அணிகள் பலப்பரிட்சையில் இறங் க உள்ளன. ஆஸ்திரேலியாவில் காமன்வெல்த் பே ங்க் சார்பிலான முத்தரப்பு ஒரு நாள் தொடர் போட்டிகள் கடந்த ஒரு மாத காலத்திற்கு மேலாக வெகு விமர்சை யாக நடந்து வருகிறது. இதில் ஆஸ்திரேலியா, இந்தியா மற்று ம் இலங்கை ஆகிய 3 நாடுகள் பங்கேற்றன. முன்னதாக நடந்த லீக் ஆட்டங்க ளின் முடிவில் ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகள் கூடுதல் புள்ளிகள் பெற்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறின. இந்தியா 3 -வது இடம் பிடித்து வெளி யேறியது. 

இதன் இறுதிச் சுற்றுப் போட்டி 3 போட்டியாக நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. முதல் இரண்டு ஆட்டத்தில் ஒரே அணி வெற்றி பெற்றால் 3 -வது போட்டி நடக்காது. முதல் இறுதிச் சுற்றுப் போட்டி 4 -ம் தேதி நடந்தது. 

இதில் ஆஸ்திரேலிய அணி 15 ரன் வித் தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நி லையில் 2 -வது போட்டியிலும் வெற் றி பெறும் ஆர்வத்தில் ஆஸ்திரேலியா இன்று இலங்கையுடன் மோத உள்ளது. இந்தப் போட்டி அடிலெய்டு நகரில் நடக்கிறது. 

இலங்கை அணிக்கு எதிராக நடந்த முத ல் இறுதிச் சுற்றில் ஆஸ்திரேலிய அணியால் எளிதில் வெற்றி பெற முடியவில் லை. கடும் போராட்டத்திற்குப் பிறகே அந்த அணி வெற்றி பெற்றது. 

ஆஸ்திரேலிய அணியில் கடந்த போட்டியில் துவக்க வீரரான டேவிட் வார்னர் 165 ரன்னை எடுத்து அணி வெற்றி பெற உதவினார். ஆனால் அவர் காயம் அடைந்து உள்ளதால் இன்றைய போட்டியில் பங்கேற்பது கேள்விக் குறியாகி உள்ளது. 

அதிரடி வீரரான வார்னர் ஆடாவிட்டால் அது ஆஸி. அணிக்கு பலவீனமே. ஆஸி. அணியில் கேப்டன் மைக்கேல் கிளார்க், ஹஸ்சே சகோதரர்கள், வா டே, வாட்சன், பாரெஸ்ட் ஆகியோர் நல்ல பார்மில் உள்ளனர். 

இன்றைய போட்டியில் வார்னர் ஆடாத பட்சத்தில், அவருக்குப் பதிலா க பாரெஸ்ட் அணியில் இடம் பெறு வார். கடந்த போட்டியில் ஹில்பென் ஹாசின் வேகப் பந்து வீச்சு எடுபடவி ல்லை. 

தவிர, கடந்த போட்டியில் ஆஸ்திரே லிய அணியின் பந்து வீச்சு ஒட்டு மொ த்தத்தில் சரியில்லை என்று கேப்டன் கிளார்க் அளித்த பேட்டியில் அவர்களை குறை கூறியிருந்தார். 2 -வது ஆட்டத்தி ல் மெக்காய்க்கு வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.  

இலங்கை அணியில் கேப்டன் ஜெயவர் த்தனே, தில்ஷான், உபுல் தரங்கா, சண்டிமால் மற்றும் குலசேகரா ஆகியோர் நல்ல நிலையில் உல்ளனர். 

கடந்த போட்டியில் ஆல்ரவுண்டர் குல சேகரா அதிரடியாக ஆடி 73 ரன்னைக் குவித்து ஆஸி. அணிக்கு கடும் சவா லை அளித்தார். எனவே இன்றைய போட்டியிலும் அவர் அதிரடியாக ஆட முயற்சிப்பார் என்று எதிர்பார்க்கப்படு கிறது. 

தற்போதைய நிலையில், ஆஸ்திரேலி யா மற்றும் இலங்கை அணிகள் சமபல ம் வாய்ந்தவைகளாக திகழ்கின்றன. எனவே இந்த 2 -வது இறுதிச் சுற்று ரசிக ர்களுக்கு நல்ல விருந்தாக இருக்கும் என்று கூறப்படுகிறது. 

ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான 2 -வது இறுதிச் சுற்றுப் போட்டி அடிலெய்டு நகரில் இந்திய நேரப்படி காலை 8.30 மணிக்கு துவங்குகிறது. இந்தப் போட்டி ஸ்டார் கிரிக்கெட் சேனல் மற்றும் இ.எஸ்.பி.என். சேனல்களில்  நேரடி யாக ஒளிபரப்பாகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்