முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

புதன்கிழமை, 7 மார்ச் 2012      விளையாட்டு
Image Unavailable

 

அடிலெய்டு, மார்ச். 7 - முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொட ரில் அடிலெய்டில் நடந்த 2 -வது இறுதி ச் சுற்று ஆட்டத்தில் இலங்கை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலி ய அணியை வீழ்த்தியது. இதன் மூலம் இந்தத் தொடர் 1- 1 என்ற கணக்கில் சம னாகியுள்ளது. இந்தப் போட்டியில் இலங்கை அணி தரப்பில் தில்ஷான் சதம் அடித்தார். ஜெயவர்த்தனே அவருக்கு பக்கபலமாக ஆடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். ஆஸ்திரேலிய அணி சார்பில், துவக்க வீரர் வார்னர் மற்றும் கேப்டன் கிளார்க் இருவரும் சதம் அடித்தும் அந்த அணியால் வெற்றி பெற முடியவில்லை. 

இலங்கை அணிக்கு எதிரான இந்த 2- வதுஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியி ன் பந்து வீச்சு எடுபடவில்லை. முதல் போட்டியிலேயே ஆஸி. அணி கடும் போராட்டத்திற்குப் பிறகு தான் வெற் றி பெற்றது நினைவு கூறத்தக்கது. 

இந்த 2 -வது இறுதிச் சுற்றில் இரு அணி வீரர்களின் பந்து வீச்சும் எடுபடவில் லை. இலங்கை அணி சார்பில் முன்ன ணி வேகப் பந்து வீச்சாளரான மலிங் கா 3 முக்கிய விக்கெட்டைக் கைப்பற் றினார். 

காமன்வெல்த் பேங்க் சார்பிலான முத் தரப்பு ஒரு நாள் தொடர் போட்டிகள் ஆஸ்திரேலியாவில் கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக வெகு விமர்சை யாக நடந்து வருகிறது. 

இதன் இறுதிச் சுற்று 3 போட்டியாக நடந்து வருகிறது. முன்னதாக நடந்த முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா பரபரப்பான ஆட்டத்தில் 15 ரன் வித்தியாசத்தில் இலங்கையை தோற்கடித்து 1 - 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. 

இந்நிலையில், இதன் 2 -வது இறுதிச் சுற்று ஆட்டம் அடிலெய்டு நகரில் நே ற்று பகலிரவு ஆட்டமாக நடந்தது. இதில் ஆஸ்திரேலியா மற்றும் இலங் கை அணிகள் களம் இறங்கின. 

முன்னதாக இந்தப் போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணி சார்பில் வார்னர் மற்றும் வாடே இருவரும் ஆட்டத்தை துவக்கினர். 

ஆஸ்திரேலிய அணி இறுதியில் நிர்ணயி க்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 271 ரன்னை எடுத்தது. அந்த அணி சார்பில் 2 வீரர்கள் சதம் அடித்தனர். 

துவக்க வீரர் வார்னர் 140 பந்தில் 100 ரன் னை எடுத்தார். இதில் 4 பவுண்டரி மற் றும் 1 சிக்சர் அடக்கம். இறுதியில் அவர் மலிங்கா வீசிய பந்தில் தில்ஷானிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 

கேப்டன் மைக்கேல் கிளார்க் 91 பந்தில் 117 ரன்னை எடுத்தார். இதில் 5 பவுண்ட ரி மற்றும் 4 சிக்சர் அடக்கம். தவிர, வா டே 14 ரன்னையும், வாட்சன் 15 ரன் னையும் எடுத்தனர். 

இலங்கை அணி தரப்பில், முன்னணி வேகப் பந்து வீச்சாளரான மலிங்கா 40 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட் சாய்த் தார். தவிர, தில்ஷான் 1 விக்கெட் எடுத் தார். 

இலங்கை அணி 272 ரன்னை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்கை ஆஸி. அணி வைத்தது. அடுத்து களம் இறங்கிய அந்த அணி 44.2 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 274 ரன்னை எடுத் தது. 

இதனால் இலங்கை அணி இந்த 2 -வது இறுதிச் சுற்றில் 8 விக்கெட் வித்தியாசத் தில் அபார வெற்றி பெற்றது. இதனால் 3 போட்டிகள் கொண்ட இந்த இறுதிச் சுற்றுத் தொடர் 1 - 1 என்ற கணக்கில் சமனாகியுள்ளது. 

இலங்கை அணி சார்பில் துவக்க வீரர்களாக இறங்கிய தில்ஷான் மற்றும் கேப் டன் ஜெயவர்த்தனே இருவரும் அதிரடி யாக ஆடி அணியை வெற்றி பெற வை த்தனர். 

தில்ஷான் சதம் அடித்தது ஆட்டத்தின் சிறப்பம்சமாகும். அவர் 119 பந்தில் 106 ரன்னை எடுத்தார். இதில் 10 பவுண்டரி அடக்கம். இறுதியில் அவர் பிரட்லீ வீசி ய பந்தில் மைக் ஹஸ்சேவிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். 

அவருக்குப் பக்கபலமாக ஆடிய கேப் டன் ஜெயவர்த்தனே 76 பந்தில் 80 ரன் னை எடுத்தார். இதில் 8 பவுண்டரி மற் றும் 1 சிக்சர் அடக்கம். தவிர, சங்கக்க ரா 51 ரன்னையும், சண்டிமால் 17 ரன் னையும் எடுத்தனர். 

ஆஸ்திரேலிய அணி சார்பில் பிரட்லீ 41 ரன்னைக் கொடுத்து 1 விக்கெட் எடுத் தார். பட்டின்சன் 47 ரன்னைக் கொடுத் து 1 விக்கெட் எடுத்தார். இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக தில்ஷான் தே ர்வு செய்யப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்