முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய அணிக்கு அஞ்சும் சோப்ரா கேப்டனாக நியமனம்

புதன்கிழமை, 7 மார்ச் 2012      விளையாட்டு
Image Unavailable

 

புதுடெல்லி, மார்ச். 7 - ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணிக்கு எதிராக நடக்க இருக்கும் ஒரு நாள் தொடருக்கான இந்திய அணிக்கு மூத்த வீராங்கனை அஞ்சம் சோப்ரா கேப்ட னாக நியமிக்கப்பட்டு இருக்கிறார். இத ன் விபரம் வருமாறு : -  ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு இந்திய மகளிர் அணிக்கு எதி ராக 3 ஒரு நாள் போட்டி மற்றும் 5 டி - 20 போட்டிகளில் பங்கேற்க இருக்கிறது. ஆஸி. அணிக்கு எதிரான இந்தத் தொட ரில் இந்திய அணியின் கேப்டனாக மூத் த வீராங்கனை அஞ்சும் சோப்ரா நியமிக்கப்பட்டு இருக்கிறார். துணைக் கேப் டனாக மிதாலி ராஜ் இருப்பார். 

கடந்த மாதம் 29 -ம் தேதி மும்பையில் அகில இந்திய மகளிர் தேர்வுக் குழுக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தின் போது, 15 பேர் கொண்ட வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டனர். பி.சி.சி. ஐ. விடுத்துள்ள அறிக்கையில் இது தெ ரிவிக்கப்பட்டு உள்ளது. 

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய மகளிர் அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட 20 -க்கு 20 போட்டி ஆகியவை நடக்க இருக்கிறது. 

இரு அணிகளுக்கு இடையேயான முத ல் ஒரு நாள் போட்டி அகமதாபாத் நக ரில் இந்த மாதம் 12 -ம் தேதி நடக்கிறது. அதன் பின்பு மும்பையில் 14 மற்று ம் 16 -ம் தேதிகளில் இரண்டு ஆட்டங்கள் நட க்கிறது. 

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிக ளுக்கு இடையேயான 5 டி - 20 போட்டிகளும் விசாகப்பட்டினத்திலேயே நட க்கிறது. இந்தப் போட்டி இந்த மாதம் 18 -ம் தேதி துவங்கி 23 -ம் தேதி முடிவ டைகிறது. 

இந்திய அணி: - அஞ்சும் சோப்ரா (கே ப்டன்), மிதாலி ராஜ் (துணைக் கேப்ட ன்), ஜூலான் கோஸ்வாமி, பூனம் ரவு ட், அர்ச்சனா தாஸ், எஸ். சுபலக்ஷ்மி, ரீமா மல்கோத்ரா, ருமேலி தர், எக்டா பிஸ்த், கெளஹர் சுல்தானா, சுனிதா ஆனந்த், ஹர்மன்பிரீத் கெளர், மம்தா கனோஜியா, சுலக்ஷ்சனா நாயக், நூஷி ன் அல் காதிர் ஆகியோர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்