முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பரங்குன்றத்தில் நடந்த முருகப் பெருமானின் திருக்கல்யாணம்

புதன்கிழமை, 23 மார்ச் 2011      ஆன்மிகம்
Image Unavailable

 

திருப்பரங்குன்றம்,மார்ச்.23 - திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனித் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை திருக்கல்யாணம் நேற்று கோலாகலமாக நடந்தது. முருகப் பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நடைபெறும் திருவிழாக்களில் மிகவும் பிரசித்தி பெற்றது பங்குனி திருவிழாவாகும். 15 நாட்கள் நடக்கும் இந்த திருவிழா கடந்த 11 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான முருகப் பெருமானின் திருக்கல்யாணம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. 

இதனை முன்னிட்டு நேற்று அதிகாலை உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் ஆகியோர் பல்வேறு திரவிய அபிஷேகங்கள் மற்றும் தீபாராதனை முடிந்து மணக் கோலத்தில் மூலக்கரை சந்திப்பு மண்டபத்தில் எழுந்தருளினர். பின்னர் மீனாட்சி அம்மன், பிரியாவிடை, சுந்தரேஸ்வரர் ஆகியோர் சந்திப்பு நிகழ்ச்சியும், ஒடுக்க மண்டபத்தில் கண்ணூஞ்சல் நிகழ்ச்சி முடிந்து ஆறுகால் பீடத்தில் எழுந்தருளினர். அங்கு யாகசாலை பூஜை, மாங்கல்ய பூஜை  உள்ளிட்ட பூஜைகளுக்கு பின் சுப்பிரமணிய சுவாமிக்கு வெண்பட்டும், தெய்வானைக்கு பச்சைப் பட்டும் சாத்துப்படியானது. 

அதைத் தொடர்ந்து மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர், பிரியாவிடை ஆகியோரிடம் ஆசி பெறப்பட்டு சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் ஆகியோருக்கு திருக்கல்யாணம் நடந்தது. இதையடுத்து வெள்ளி யானை வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி பூப்பல்லக்கில் தெய்வானை அம்மன் புறப்பாடாகி 16 கால் மண்டபம் சென்று மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர், பிரியாவிடை ஆகியோரிடம் விடைபெறும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் சுவாமி திருவீதி உலா நடந்தது. இன்று காலை 6 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியாக நாளை தீர்த்த உற்சவம் நடைபெறுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்