முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முத்தரப்பு தொடர்: ஆஸ்திரேலிய அணிக்கு சாம்பியன் பட்டம்

வெள்ளிக்கிழமை, 9 மார்ச் 2012      விளையாட்டு
Image Unavailable

 

அடிலெய்டு, மார்ச். 9 - முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடர் போட்டியில் அடிலெய்டு நகரில் நேற் று நடந்த 3 -வது இறுதிச் சுற்று போட்டி யில் பரபரப்பான ஆட்டத்தில் ஆஸ்தி ரேலிய அணி 16 ரன் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி கோப்பை யைக் கைபப்பற்றியது. ஆஸ்திரேலியாவில்முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடர் போட்டிகள் கடந்த ஒரு மாத காலத்திற்கு மேலாக வெகு விமர்சையாக நடந்து வந்தது. காமன்வெல்த் பேங்க் சார்பிலான இந் தப் போட்டியில் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்ற ஆஸ்திரேலியா, இந்தி யா மற்றும் இலங்கை ஆகிய 3 நாடுகள் களம் இறங்கின. முன்னதாக நடந்த லீக் ஆட்டங்களின் முடிவில் இலங்கை அணி 19 புள்ளி பெ ற்று முதலிடம் பிடித்து இறுதிச் சுற்றுக் கு முன்னேறியது. ஆஸ்திரேலிய அணி 19 புள்ளியுடன் 2 -வது இடம் பிடித்தது. இந்திய அணி 15 புள்ளி பெற்று 3-வது இடம் பெற்று வெளியேறியது. 

முத்தரப்பு தொடரின் இறுதிச் சுற்று போட்டி 3 ஆட்டங்களாக நடத்த திட்ட மிடப்பட்டது. இதன் முதல் இறுதிச் சுற் றில் ஆஸ்திரேலிய அணி 15 ரன் வித்தி யாசத்தில் வெற்றி பெற்று இந்தத் தொ டரில் 1 - 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. 

பின்னர் நடந்த 2 -வது இறுதிச் சுற்றில் இலங்கை அணி பரபரப்பான ஆட்டத் தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்தி ரேலிய அணியை தோற்கடித்தது. இதனால் இந்தத் தொடர் 1 - 1 என்ற கணக்கில் சமனாகியது. 

முதல் இரண்டு ஆட்டங்களில் இரு அணிகளும் மாறி மாறி வெற்றி பெற்றதால் கோப்பையைத் தீர்மானிக்க 3-வது இறுதிச் சுற்றுப் போட்டி நேற்று அடிலெய்டு நகரில் நடைபெற்றது. 

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்க ப்பட்ட 50 ஓவரில் 231 ரன்னை எடுத் தது. 

232 ரன்னை எடுத்தால் வெற்றி பெற லாம் என்ற இலக்கை ஆஸ்திரேலிய அணி வைத்தது. அடுத்து களம் இறங்கிய அந்த அணி 48.2 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 215 ரன்னை எடுத்தது. 

இதனால் ஆஸ்திரேலிய அணி இந்த 3 - வது இறுதிச் சுற்றில் 16 ரன் வித்தியாசத் தில் அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தையும் தட்டிச் சென்றது. 

கேப்டன் ஜெயவர்த்தனே தலைமையி லான இலங்கை அணி இந்தப் போட்டி யில் தோல்வி அடைந்த போதிலும் கடைசிவரை கடுமையாக போராடிய து. ஆஸி. அணிக்கு கடும் சவாலை அளி த்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்