ஒசாமா பின்லேடனை காட்டிக் கொடுத்த மூத்த மனைவி

திங்கட்கிழமை, 12 மார்ச் 2012      உலகம்
Image Unavailable

லண்டன், மார்ச்.13 - அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில் ஒளிந்திருந்த இடத்தை அவரது மனைவிகளில் ஒருவர்தான் காட்டிக் கொடுத்துள்ளார். இதற்கு காரணம், ஒசாமா தனது கடைசி மனைவி மீது அதிக அன்பு காட்டி வந்ததுதான் என்று பாகிஸ்தான் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஒசாமா பின்லேடனுக்கு 5 மனைவிகள். பாகிஸ்தானில் உள்ள அபோதாபாத் வீட்டில் பதுங்கியிருந்த நேரத்தில் 5 மனைவிகளில் இளையவரான அல்சதாவுடன் மட்டுமே இரவு நேரத்தை ஒசாமா உல்லாசமாக கழித்துள்ளார். அதே சமயம் அவரது மூத்த மனைவி ஹைரியாசபீர், அக்கட்டிடத்தின் தரை தளத்தில் தனியாக படுத்திருந்தாராம். தன்னை விட்டு விட்டு எந்நேரமும் அல்சதாவுடன் பின்லேடன் இருந்தது ஹைரியாவுக்கு பொறாமையை தூண்டியுள்ளது. இதனால் ஏற்பட்ட எதிர்ப்புணர்வால் அவர் தனது கணவர் பதுங்கியிருந்த இடத்தை காட்டிக் கொடுத்து விட்டார் என்று அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: