ஹெட்லியை கோர்ட்டில் ஆஜர்படுத்த உத்தரவு

புது டெல்லி, மார்ச். 15 - மும்பை குண்டுவெடிப்பு உள்ளிட்ட பல தீவிரவாத சம்பவங்களில் தொடர்புடையதாக கருதப்படும் டேவிட் ஹெட்லி உட்பட நால்வரை மே மாதம் 31 ம் தேதி ஆஜர்படுத்தும் படி தேசிய புலனாய்வு குழுவுக்கு டெல்லி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. இது தொடர்பாக பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் மேஜர் இக்பால், மேஜர் சமீர் அலி உள்ளிட்ட 5 பேருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் பிறப்பித்தும் நீதிமன்றம் உத்தரவிட்டது.