முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அர்ப்பணிப்போடு விளையாடியதால் சாதிக்க முடிந்தது: சச்சின்

திங்கட்கிழமை, 19 மார்ச் 2012      விளையாட்டு
Image Unavailable

மிர்பூர், மார்ச். - 19 - அர்ப்பணிப்போடும், முயற்சியோடும் விளையாடியதால் சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்கள் அடித்து சாதிக்க முடிந்ததாக சச்சின் தெரிவித்துள்ளார்.  கிரிக்கெட் வரலாற்றில் 100 சதங்கள் அடித்த முதல் பேட்ஸ்மேன் என்ற பெருமையை பெற்றுள்ள அவர், மேலும் கூறியதாவது, 100 சதம் தாமதமானதற்கு நான் போதிய முயற்சி எடுக்காததுதான் காரணம் என்று சொல்ல முடியாது. என்னுடைய முயற்சி மற்றும் அர்ப்பணிப்பு காரணமாகவே இந்த சாதனையை செய்ய முடிந்தது. 100 சதமடிப்பதை பெரிதாக எடுத்து கொள்ளாமல் வழக்கமாக விளையாடுவது முக்கியமானது. ரன் எடுக்கலாம். எடுக்காமலும் போகலாம். ஆனால் நான் சரியாக விளையாடுகிறேன் என்பதில் எனக்கு அபரிமிதமான நம்பிக்கை உள்ளது. எனக்காக ஆதரவாக இருந்த மக்களுக்கும், என்னை பாராட்டிய அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் சச்சின். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்