முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவின் சாய்னாநேவால் இறுதிப் போட்டிக்கு தகுதி

திங்கட்கிழமை, 19 மார்ச் 2012      விளையாட்டு
Image Unavailable

 

புதுடெல்லி, மார்ச் - 19 - ஸ்விஸ் ஓபன் கிராண்ட்பிரிக்ஸ் பேட்மிண்டன் இறுதிப் போட்டிக்கு இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால் தகுதி பெற்றுள்ளார்.  ஸ்விட்சர்லாந்தின் பாசல் நகரில் ஸ்விஸ் ஓபன் கிராண்ட்பிரிக்ஸ் பேட்மிண்டன் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த போட்டித் தொடரில் உலகின் முன்னணி வீராங்கனைகள் பட்டத்தை கைப்பற்ற களமிறங்கியுள்ளனர். இதில் கடந்த ஆண்டு சாம்பியனும் இந்திய நட்சத்திர வீராங்கனையுமான சாய்னா நேவாலும் பட்டத்தை தக்கவைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். இந்த போட்டித் தொடரின் காலிறுதிப் போட்டியில்  உலகின் 5-ம் நிலை வீராங்கனையான சாய்னா, 6 -ம் நிலை வீராங்கனையான சீனாவின் லின் ஜியூவை 21 - 12, 21 - 13 என்ற கேம் கணக்கில் எளிதில் வென்று அரையிறுதியை எட்டினார். இதையடுத்து நேற்று நடந்த அரையிறுதிப் போட்டியில் சாய்னா நேவால், ஜப்பானிய வீராங்கனையான மினாட்சு மிட்டானியை சந்தித்தார். இந்த போட்டியின் துவக்கத்தில் இருந்தே  சாய்னா நேவாலின் கை ஓங்கி இருந்தது. இதையடுத்து போட்டியின் முதல் கேமை 21 - 16 என்ற கணக்கில் கைப்பற்றினார். போட்டியின்  இரண்டாவது கேமில் எழுச்சி கண்ட ஜப்பானிய வீராங்கனை 7 - 3 என்ற கணக்கில் முன்னணியை பெற்றார். இதன்பிறகு  சுதாரித்து விளையாடிய சாய்னா நேவால் விரைவிலேயே ஜப்பான் வீராங்கனையின் சர்வீஸ்களை முறியடித்து அந்த கேமிலும்  முன்னணி பெற்றார். இதையடுத்து இரண்டாவது கேமையும் நேவால் 21 - 18  என்ற கணக்கில் வென்றார். ஜப்பானிய வீராங்கனையை வீழ்த்த 35 நிமிடங்களே இந்திய வீராங்கனைக்கு தேவைப்பட்டது. இதன்மூலம் ஸ்விஸ் ஓபன் கிராண்ட் பிரிக்ஸ் போட்டியின் இறுதிப் போட்டிக்கு தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக இந்திய வீராங்கனை தகுதி பெற்றார். மற்றொரு அரை இறுதிப் போட்டியில் உலகின் மூன்றாம் நிலை வீராங்கனையும் இந்த போட்டித் தொடரில் இரண்டாம் நிலை பெற்றவருமான சீனாவின் ஷிஜியான் வாங், தாய்லாந்தின் இன்தானோன் ரட்சானோக்கை சந்தித்தார். இந்த போட்டியில் சீன வீராங்கனை 21 -17, 21 - 15 என்ற  கேம் கணக்கில் வென்றார். இதையடுத்து பட்டத்தை வெல்பவரை தீர்மானிக்கும் இறுதிப் போட்டியில் சாய்னா நேவால், சீன வீராங்கனை ஷிஜியான் வாங்க்கை சந்திக்கிறார். 22 வயதான சாய்னா நேவால் இறுதிப் போட்டியில் வென்றால் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக இந்த பட்டத்தை வென்ற வீராங்கனை என்ற பெருமையை அடைவார்.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago