முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆசிய கோப்பை: இலங்கை - வங்கதேச அணிகள் மோதல்

செவ்வாய்க்கிழமை, 20 மார்ச் 2012      விளையாட்டு
Image Unavailable

 

மிர்பூர், மார்ச். 20 - ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் மிர்பூரில் இன்று நடக்க இருக்கும் கடைசி லீக்கில் இலங்கை மற்றும் வங் கதேச அணிகள் மோத உள்ளன. இந்தப் போட்டியின் முடிவைப் பொறு த்தே இந்திய அணி இறுதிச் சுற்றுக்கு தகுதி பெறுமா? இல்லையா என்பது தெரிய வரும். எனவே இந்தப் போட்டி இந்திய அணிக்கு முக்கியமானதாகும். ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வங்கதேசத்தின் தலைநகரான டாக்கா அருகே கடந்த ஒரு வார காலமாக வெ கு விமர்சையாக நடைபெற்று வருகிறது.  இதில் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்ற இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய 4 நாடுகள் களம் இறங்கின. இந்தப் போட்டி தற் போது விறுவிறுப்பான கட்டத்தில் உள்ளது. 

இந்திய அணி கடைசி லீக்கில் பாகிஸ் தான் அணியை சந்தித்தது. இதில் இந்தி ய அணி 2 -வது பேட்டிங்கின் போது, கடின இலக்கை விரட்டிப் பிடித்து அபார வெற்றி பெற்றது. 

பாகிஸ்தான் அணிக்கு எதிரான இந்த ஆட்டத்தின் போது, மிடில் ஆர்டர் பே ட்ஸ்மேனான விராட் கோக்லி அதிரடி யாக ஆடி, 148 பந்தில் 183 ரன்னை எடு த்தார். 

ஆனால் இந்த வெற்றி மட்டும் நடப்பு சாம்பியனான இந்திய அணிக்கு இறுதி ச் சுற்றை எட்ட போதவில்லை. இலங் கை அணி இன்றைய ஆட்டத்தில் எப்ப டி ஆடுகிறது என்பதைப் பொறுத்தே இந்திய அணியின் விதி முடிவாகும். 

முன்னதாக வங்கதேசத்திற்கு எதிரான லீக்கில் இந்திய அணி 5 விக்கெட் வித் தியாசத்தில் தோல்வி அடைந்ததால் இந்திய அணியின் ஆசிய கோப்பை கனவு உருக்குலைந்தது. 

இருந்த போதிலும், அதற்கு தற்போது சிறிது உயிர் வந்திருக்கிறது. இன்றைய கடைசி லீக்கிற்காக இந்திய அணி காத் திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள் ளது. 

இன்று நடக்க இருக்கும் கடைசி லீக்கி ல் இலங்கை அணி வெற்றி பெறும் பட்சத்தில் இந்திய அணி இறுதிச் சுற்றுக்கு தகுதி பெறும். வங்கதேச அணி வெற்றி பெற்றால், அந்த அணியும், பாகிஸ்தா  னும் இறுதிச் சுற்றில் மோதும். 

இந்தப் போட்டியின் விதிகளின் படி இரு அணிகள் சமபுள்ளிகள் பெறும் பட்சத்தில், முந்தைய போட்டிகளின் முடி வுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்ப டும். அதன் படி வங்கதேசம் இந்திய அணியை வீழ்த்தியதால் அது இறுதிச் சுற்றுக்கு செல்ல வாய்ப்பு உள்ளது. 

ஆசிய கோப்பை போட்டியைப் பொ றுத்தவரை இரு அணிகளின் பார்மை பார்க்கும் போது, இன்றைய ஆட்டத்தி ல் வங்கதேச அணி வெற்றி பெற வாய்ப்புள்ளது. 

புலிகள் என்ற பெயரைக் கொண்ட வங் கதேச அணி உள்நாட்டு ரசிகர்கள் முன் னிலையில் சிறப்பான ஆட்டத்தை வெ ளிப்படுத்த தயாராக உள்ளது. 

வங்கதேச அணியில் துவக்க வீரர் தமீம் இக்பால், ஜக்ருல் இஸ்லாம், நசீர் ஹொசைன், ஷாகிப் அல் ஹசன், மற்று ம் கேப்டன் முஸ்பிகர் ரகீம் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். 

ஆனால் இந்தப் போட்டியில் வங்கதேச அணியின் பெளலிங் பலவீனமாகவே உள்ளது. அந்த அணியின் சுழற் பந்து வீச்சாளர்களான ஷாகிப், அப்துர் ரசாக், மக்மதுல்லா மற்றும் நசீர் ஹொசைன் ஆகியோரது பந்து வீச்சு எடுபடவில் லை. 

இலங்கை மற்றும் வங்கதேச அணிகளு க்கு இடையே மிர்பூரில் இன்று நடக்க இருக்கும் கடைசி லீக் போட்டி பிற்பக ல் 1.30 மணிக்கு துவங்குகிறது. இந்தப் போட்டி நியோ கிரிக்கெட் சேனலில் நேரடியாக ஒளிபரப்பாகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்