முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆசிய கோப்பை இறுதிச்சுற்றில் பாக்.,- வங்கம் மோதல்

வியாழக்கிழமை, 22 மார்ச் 2012      விளையாட்டு
Image Unavailable

 

மிர்பூர், மார்ச். 22 - ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியி ல் மிர்பூரில் இன்று நடக்க இருக்கும் இறுதிச் சுற்றில் கோப்பையைக் கைப்பற்ற பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் உச்ச கட்ட மோதலில் ஈடுபட வுள்ளன. வங்கதேசத்தில் கடந்த 11 - ம்தேதி ஆசி ய கோப்பை கிரிக்கெட் போட்டி துவங் கியது. முதலில் லீக் ஆட்டங்கள் நடந்தன. இன்று மிர்பூரில் உள்ள ஷெரே பங்க்ளா தேசிய மைதானத்தில் இறுதிச்சுற் று நடக்க இருக்கிறது. ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் கோப்பையைக் கைப்பற்ற நடப்பு சாம்பியன் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய 4 நாடுகள் களம் இறங்கின. 

இதில் பங்கேற்ற 4 நாடுகளும் லீக் ஆட்டத்தில் தங்களது முழுத் திறனையும் வெளிப்படுத்தி கிரிக்கெட் ரசிகர்களின் ஆவலைத் தீர்த்தன. இந்தப் போட்டி தற்போது விறுவிறுப்பான கட்டத்தை அடைந்து உள்ளது. 

முன்னதாக நடந்த லீக் ஆட்டங்களின் முடிவில் பாகிஸ்தான் மற்றும் வங்க தேச அணிகள் கூடுதல் புள்ளிகள் பெற்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறின. 

நடப்பு சாம்பியனான இந்தியாவும், இலங்கையும் குறைவான புள்ளிகள் பெற்றதால் போட்டியில் இருந்து வெளியேறின. இலங்கை அணி இந்தப் போட்டியில் ஒரு வெற்றி கூட பெற முடிய வில்லை. 

கடந்த 1984 -ம் ஆண்டு ஆசிய கோப்பை போட்டி துவங்கியதில் இருந்து இந்தியா மற்றும் இலங்கை அணிகள் இதில் ஆதிக்கம் செலுத்தி வந்தது குறிப்பிட த்தக்கது. 

இந்திய அணி ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இதுவரை 5 முறை பட்டம் வென்று சாதனை படைத்து உள்ளது. இலங்கை அணி 4 முறை பட்டம் வென்று இருக்கிறது. பாக். ஒரு முறை பட்டம் வென்று உள்ளது. 

பாகிஸ்தான் அணி கடந்த 2000 -ம் ஆண்டு கோப்பையை வென்றது. அந்தப் போட்டியும் வங்கதேசத்தில் தான் நடந்தது. அதன் பிறகு 2 -வது முறையாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது. 

பாகிஸ்தான் அணியின் பேட்டிங் வலுவாக உள்ளது. துவக்க வீரர்கள் மொக மது ஹபீஸ் மற்றும் நசீர் ஜாம்ஷெட் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். 

மிடில் ஆர்டரில் யூனிஸ்கான் மற்றும் உமர் அக்மல் இருவரும் நன்றாக ஆடி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக கேப்டன் மிஸ்பா உள்ளார். ஆனால் பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சு தான் சற்று பலவீனமாக உள்ளது. முக்கியமாக இந்தியாவுக்கு எதிரான போட்டியில் அந்த அணியின் பந்து வீச் சு எடுபடவில்லை. 

முன்னணி வீரரான உமர் குல் விக்கெட் எடுக்கிறார். ஆனால் அதிக ரன் கொடு த்து விடுகிறார். சீமா பந்து வீச்சு எடுப டவில்லை. சுழற் பந்து வீச்சாளர் அஜ்ம ல் நன்கு பந்து வீசி வருகிறார். 

வங்கதேச அணி சர்வதேச போட்டிகளி ல் கடந்த சில ஆண்டுகளாக பங்கேற்று வருகிறது. ஆனால் ஒரு முறை கூட அந்த அணி இது போன்ற பெரிய போட்டிகளில் இறுதிச் சுற்றை எட்டியது இல் லை. 

ஆனால் இந்தியா மற்றும் இலங்கை அணிகளின் தோல்வியால் அந்த அணி முதல் முறையாக ஆசிய கோப்பை போட்டியில் இறுதிச் சுற்றை எட்டி சா தனை படைத்து இருக்கிறது.

இறுதிச் சுற்றை எட்டிய மகிழ்ச்சியில் இருக்கும் வங்கதேச அணி வீரர்கள் முழு உற்சாகத்துடன் உள்ளனர். இறுதிச் சுற்றில் எப்படியும் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் அவர்கள் களம் இறங்குகின்றனர். 

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வங்கதேசத்தில் நடந்து வருவதால் உள் நாட்டு ரசிகர்களின் பெரும் ஆதரவுடன் அந்த அணி இறுதிச் சுற்றில் பாகிஸ்தா னை சந்திக்க காத்திருக்கிறது. 

வங்கதேச அணியின் பேட்டிங்கில் துவ க்க வீரர் தமீம் இக்பால் நல்ல பார்மில் இருக்கிறார். இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் அவர் அரை சதம் அடித்து அணி வலுவான நிலையை எட்ட உத வினார். 

மிடில் ஆர்டரில் ஆல்ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் நன்றாக ஆடி வருகிறார். அவருக்கு ஆதரவாக மற்ற வீரர்கள் கள ம் இறங்க ஆயத்தமாகி வருகின்றனர். 

இந்தப் போட்டி குறித்து தமீம் இக்பா லிடம் கேட்ட போது, நாங்கள் இறுதிச் சுற்றை எட்டியதே மிகப் பெரிய சாத னையாகும். இதே போல இறுதிச் சுற் றிலும் சிறப்பான ஆட்டத் திறனை வெ ளிப்படுத்தி கோப்பையைக் கைபப்பற்ற முயற்சிப்போம் என்றார் அவர். 

பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே மிர்பூரில் இன்று நட க்க இருக்கும் இறுதிச் சுற்று ஆட்டம் பிற்பகல் 1.30 மணிக்கு துவங்குகிறது. இந்தப் போட்டி நியோ கிரிக்கெட் சே னலில் நேரடியாக ஒளிபரப்பாகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்