முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெஸ்ட் அணி: கோக்லிக்கு நிரந்தர இடம் கிடைக்குமா ?

புதன்கிழமை, 21 மார்ச் 2012      விளையாட்டு
Image Unavailable

 

புதுடெல்லி, மார்ச். - 21 - இந்திய கிரிக்கெட்டில் டெஸ்ட் போட்டிக்கான அணியில் இளம் வீரர் விராட் கோக்லிக்கு நிரந்தர இடம் கிடைக்கு மா?  இந்திய அணியில் மிடில் ஆர்டரில் கல க்கி வரும் விராட் கோக்லிக்கு இதுவ ரை டெஸ்ட் போட்டிக்கான அணியில் நிரந்தர இடம் கிடைக்கவில்லை.  அவர் இதுவரை 8 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் பங்கு கொண்டு இருக்கிறார். இதில் ஒரு சதம்அடித்து இருக்கிறார். அவரது டெஸ்ட் சராசரி 32.73 ஆகும்.  சமீப காலமாக விராட் வெகு சிறப்பா க ஆடி வருகிறார். ஆசிய கோப்பையி ல் கடந்த 18 -ம் தேதி நடந்த பாக். கிற்கு எதிரான ஆட்டத்தில் அவர் அவர் அதிர டியாக ஆடி 148 பந்தில் 183 ரன்னை குவித்தார். இந்த ஆட்டத்தைக் கண்டு வங்கதேச ரசிகர்கள் திகைத்துப் போ   னார்கள்.  ஆஸ்திரேலியாவில் கடந்த 28 ம் தேதி நடந்த இலங்கைக்கு எதிரான ஆட்டத் தில் 88 பந்தில் 128 ரன் குவித்தார். அவர் இதுவரை 83 ஒரு நாள் போட்டியில் விளையாடி 11 சதம் அடித்து இருக்கிறார்.  கோக்லி சர்வதேச ஒரு நாள் போட்டிக ளில் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருவதால் அவரை டெஸ்ட் போட்டி யில் பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது.  டெஸ்ட் அணியில் இருந்து மூத்த வீர ரான ராகுல் டிராவிட் ஓய்வு பெற்று இருக்கிறார். அந்த இடத்திற்கு கோக்லி வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தவிர, மூத்த வீரர்களான டெண்டுல்கர் மற்றும் வி.வி.எஸ். லக்ஷ்மண் ஆகி யோர் விரைவில் ஓய்வு பெற வாய்ப்பு உள்ளது.அதே நேரத்தில் அவர்களுக்கு மாற்றாக விராட் கோக்லி தான் இருக் கிறார். 

எனவே டெஸ்ட் அணியில் கோக்லிக்கு நிரந்தர இடம் கிடைத்து விடும். இது தொடர்பாக முன்னாள் கேப்டன் கபில் தேவ் கூறியதாவது - 

கோக்லி எல்லாவகையிலும் சிறந்த வீர ராக இருக்கிறார். இளம் வீரராக இருக் கும் அவர் இந்திய அணி உலகின் முன் னணி இடத்தில் இருக்க உதவுவார். 

எனவே அவரை தக்கமுறையில் பயன் படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வா று 1983-ம் ஆண்டு இந்திய அணிக்கு உல கக் கோப்பையை பெற்றுக் கொடுத்த கபில்தேவ் கூறினார். 

----------------------------------------- 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்