முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்டீவ் வாஹ் எனது வழிகாட்டி: ராகுல் டிராவிட்

வெள்ளிக்கிழமை, 23 மார்ச் 2012      விளையாட்டு
Image Unavailable

 

பெங்களூர், மார்ச். 23 - ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் வாஹ் தான் எனது வழிகாட்டி என்று சமீபத்தில் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற இந்திய அணியின் மூத்த வீரரான ராகுல் டிராவிட் தெரிவித்து இருக்கிறார். தனது இளமைக் காலத்தில் வாஹ்கின் ஆட்டத்தை ரசித்து பார்த்ததாகவும், அவரது மேனரிசத்தை பின்பற்றியதால் தான் ஒரு பெரிய கிரிக்கெட் வீரராக உருவாக முடிந்தது என்றும் ராகுல் கூறி இருக்கிறார். 

இந்திய அணியின் சுவர் என்று வர்ணிக்கப்படும் ராகுல் டிராவிட் பல இளம் வீரர்களுக்கு ரோல் மாடலாக இருக்கிறார். அவர் தனது வழிகாட்டி என்று ஸ்டீவ் வாஹ்கை கூறியிருப்பது ஆச்சரியமளிக்கிறது. 

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து சமீபத்தில் ஓய்வு பெற்ற ராகுல் டிராவிட்டிற்கு கர்நாடக கிரிக்கெட் சங்

கம் சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. அதில் கலந்து கொண்டு பேசிய அவர் மேற்கண்டவாறு தெரிவித்

தார். மேலும், எனது கிரிக்கெட் வாழ்க்கையில் ஸ்டீவ் வாஹ்கிற்கு முக்கிய இடம் உண்டு. அவரை பின்பற்றியே நான் எனது தொழில் நுணுக்கத்தை வளர்த்துக் கொண்டேன் என்றும் அவர் கூறினார். 

நட்சத்திர வீரர்களான டெண்டுல்கர் மற் றும் பிரைன் லாரா போன்று வாஹ் பெரிய ஷாட்டுகள் எதனையும் அடிப்பதி ல்லை. ஆனால் அவரை எளிதாக அவுட்டாக்க முடியாது என்று டிராவிட் தெரிவித்தார். ஆஸ்திரேலிய வீரரின் இந்த மேனரிசத்

தை தான் கடை பிடித்ததாகவும் , அதனால் தனது விக்கெட்டை பாதுகாத்து அதிக ரன் குவிக்க முடிந்தது என்றும் டிராவிட் கூறினார். கடந்த 16 ஆண்டு காலமாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பங்கு கொண்டு இந்திய அணிக்காக தான் விளை

யாடியதால் ஓய்வு பெற்றது தனக்கு வருத்தம் அளிக்கவில்லை என்றும் ராகுல் தெரிவித்தார். 

இந்த பாராட்டு விழாவின் போது, ஆல்ரவுண்டர் கபில்தேவும் கலந்து கொண்டு டிராவிட் அருகிலேயே அமர்ந்து விழாவை சிறப்பித்தார். இந்திய அணியில் தான் பேட்டிங்,கீப்பி ங் என்று ஆல்ரவுண்டராக இருந்த போ திலும், உலகக் கோப்பையை வென்று கொடுத்த கபில்தேவை நெருங்க முடியாது என்றும் ராகுல் கூறினார். 

நான் ஜவ்ஹல் ஸ்ரீநாத்திடம் பல முறை எப்படி இவ்வாறு வேகமாக பந்து வீசுகிறீர்கள்? எப்படி வேகமாக பேட்டிங் செய்கிறீர்கள்? என்று கேட்டேன். அதற்கு அவர் இதற்கு தனித் திறமை வேண்டும் என்று கூறுவார். அது போலத்தான் எனக்கு வேகமாக பந்து வீச வராது. நான் ஒரு கிரிக்கெட் மைதானத்தில் எது வேண்டுமானாலும் செய்வேன். ஆனால் வேகமாக பந்து வீச வராது. அது எனக்கு எளிதான காரியம் அல்ல என்றும் டிராவிட் தெரி

வித்தார். 

கிரிக்கெட் தவிர ஹாக்கி எனக்கு பிடித்தமான ஆட்டமாகும். ஹாக்கியில் சென்டர் ஆப்பில் நான் விளையாடுவேன். பொழுது போக்கிற்காக நான் இதில் கலந்து கொள்வேன் என்றும் ராகுல் கூறினார். வி.வி.எஸ் லக்ஷ்மண் இந்திய அணியில் மட்டும் அல்ல. உள்நாட்டுப் போட்டிகளிலும் எனக்கு நல்ல பார்ட்னர் ஆவார். நானும் அவரும் இணைந்து அணிக்காக அதிக ரன்களைக் குவித்து இருக்கிறோம் என்றும் டிராவிட் தெரிவித்தார்.

சுனில் கவாஸ்கரும், விவியன் ரிச்சர்ட்சும் எனது குழந்தை பருவ ஹீரோக்கள். தவிர, டெண்டுல்கர் மற்றும் சிலரது ஆட்டத்தையும் நான் விரும்பிப் பார்ப் துண்டு என்றும் டிராவிட் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்