முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஓய்வு பெற்ற ராகுல் டிராவிட்டிற்கு பாராட்டு விழா

வெள்ளிக்கிழமை, 23 மார்ச் 2012      விளையாட்டு
Image Unavailable

 

புதுடெல்லி, மார்ச். 23 - சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து சமீபத்தில் ஓய்வு பெற்ற இந்திய அணியின் முன்னாள் கேப்டனான ராகுல் டிராவிட்டிற்கு பி.சி.சி.ஐ. சார்பில் வரும் 27 -ம் தேதி பாராட்டு விழா நடக்க இருக்கிறது. கர்நாடக வீரரான ராகுல் டிராவிட் கடந்த 16 ஆண்டு காலமாக சர்வதேச போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடி பல சாதனைகளை படைத்து இருக்கிறார். இந்திய அணிக்காக அர்ப்பணிப்பு உணர்வுடன் ஆடிய அவருக்கு பி.சி.சி.ஐ. சார்பில் வரும் 27 -ம் தேதி மும்பையில் உள்ள டாஜ் லாண்ட்ஸ் என்ட் ஹோட்டலில் பாராட்டு விழா நடக்க இருக்கிறது. 

இந்த பாராட்டு விழாவில், இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள், முன்னாள் கேப்டன்கள் மற்றும் வீரர்கள், டிராவிட்டின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பி.சி.சி.ஐ.யின் தற்போதைய மற்றும் முன்னாள் உறுப்பினர்கள் ஆகியோர் பங்கேற்க இருக்கின்றனர். 

கடந்த 16 ஆண்டு காலம் சர்வதேச போட்டிகளில் பங்கேற்ற டிராவிட் இதுவரை 164 டெஸ்டுகளில் விளையாடி மொத்தம், 13,2,88 ரன்னைக் குவித்து இருக்கிறார். இதன் மூலம் அதிக ரன் குவித்த இந்திய வீரர்களில் 2 வது இடத்தில் ராகுல் இரு

க்கிறார். டெண்டுல்கர் 15,470 ரன்னைக் குவித்து முதலிடத்தில் உள்ளார். தவிர, 344 ஒரு நாள் போட்டிகளில் பங் கு கொண்ட அவர் மொத்தம் 10,889 ரன் னக் குவித்து இருக்கிறார். இதன் மூலம் ஒரு நாள் போட்டியில் 10,000 ரன்னைக்

கடந்த உலகின் 10 வீரர்களில் ஒருவர் என்ற பெருமையையும், 3-வது இந்திய வீரர் என்ற பெருமையையும் அவர் பெ

ற்று இருக்கிறார். டிராவிட் கடந்த 2007 -ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்த புதிய மைல் கல்லைப் படைத்தார். ஆனால் கடந்த 2009 ம் ஆண்டு மற்றும் கடந்த வருடங்களில் அவர் மொத்தம் 9 போட்டிகளில் மட்டும் பங்கேற்று இருக்கிறார். 

இந்த மாதம் 9 -ம் தேதி மூத்த வீரரான டிராவிட் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவர் ஏற்கனவே ஒரு நாள் போட்டியி  இருந்து ஓய்வு பெற்று விட்டார். ஆனால் இந்தியன் பிரீமியர் லீக் சார்பிலான டி - 20 போட்டிகளில் அவர் தொடர்ந்து விளையாடுவார். அவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு கேப்டனாக இருப்பார். ஐ.பி.எல். போட்டி சென்

னையில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் அடுத்த மாதம் 4-ம் தேதி துவங்குகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்