முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காயம் ஏற்பட்டதால் ஓய்வு: வீரேந்தர் சேவாக்

ஞாயிற்றுக்கிழமை, 4 மார்ச் 2012      விளையாட்டு
Image Unavailable

 

புதுடெல்லி, மார்ச். - 4 - ஆஸ்திரேலிய தொடரின் போது, காய ம் ஏற்பட்டதால் நானாகவே ஓய்வு கேட்டேன். இதனால் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள் ள வில்லை என்று இந்திய அணியின் அதிரடி துவக்க வீரரான வீரேந்தர் சே வாக் தெரிவித்து இருக்கிறார். ஆஸ்திரேலியாவில் முத்தரப்பு ஒரு நா ள் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த ஒரு மாத காலத்திற்கு மேலாக நடந்து வருகிறது.  இந்தப் போட்டியில் கோப்பையைக் கைப்பற்ற ஆஸ்திரேலியா, இந்தியா மற்றும் இலங்கை ஆகிய 3 நாடுகள் களம் இறங்கின. இந்தப் போட்டி வெகு விமர்சையாக நடந்து வருகிறது.  முன்னதாக நடந்த லீக் போட்டிகளில் போட்டியை நடத்தும், ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகள் அதிக புள் ளிகள் பெற்று இறுதிச் சுற்றுக்கு முன் னேறின. இந்திய அணி 3 -ம் இடம் பிடி த்து வெளியேறியது.  இதற்கு முன்னதாக இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே டெஸ்ட் தொடர் நடந்தது. இந்த தொட ர் மற்றும் ஒரு நாள் தொடர்களில் சே வாக் சரியாக ஆட வில்லை.  எனவே அடுத்து நடக்க இருக்கும் தொ ட ரில் சேவாக் நீக்கப்படுவார் என்று பத்திரிகைகளில் செய்தி வெளியானது. இந்த யூகம் சரியாக அமைந்தது.  இந்திய அணி அடுத்து பங்கேற்க இருக் கும் ஆசிய கோப்பை போட்டிக்காக 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி கடந்த சில நாட்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது.  ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் சேவாக் இடம் பெறவில்லை. ஆனால் சேவாக்கிற்கு உடற்தகுதி இல் லாததால் அவருக்கு ஓய்வு அளிக்கப்ப ட்டு உள்ளது என்று  தேர்வுக் குழுத்த லைவர் ஸ்ரீகாந்த் தெரிவித்தார். 

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வங்கதேசத்தில் விரைவில் துவங்க இரு க்கிறது. இதில் இந்தியா, இலங்கை , வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் ஆகி ய 4 நாடுகள் பங்கேற்கின்றன. 

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் 11 -ம் தேதி முதல் 22 -ம் தேதி வரை நடக்கிறது. இதில் கோப்பையை கைப்பற்ற 4 நாடுகளும் ஆயத்தமாகி வருகின்றன.  இதில் இடம் பெறாதது குறித்து சேவா க்கிடம் கேட்ட போது, தானாகவே  ஓய்வு கேட்டதாக கூறியிருக்கிறார். ஆஸி. பத்திரிகைக்கு அவர் அளித்த பே ட்டி வருமாறு  -  நான் முதுகு தசைப் பிடிப்பால் அவதிப் பட்டு வருகிறேன். இதற்கு சிகிட்சை தேவைப்படுகிறது. எனவே தான் ஆசி ய கோப்பை போட்டியில் பங்கேற்க விரும்பாமல் ஓய்வு கேட்டேன்.  எனவே ஏனக்கு ஓய்வு கொடுத்துள்ளனர். எனது காயம் பற்றி அனைவருக்கும் தெரியும். எனது உடற் தகுதியைப் பொறுத்தவரை அணி நிர்வாகத்திடம் நான் எதனையும் மறைத்தது இல்லை.  முன்பு தோள்பட்டை காயத்திற்காக சிகிட்சை பெற்றேன். அப்போது கூட பயிற்சியாளர் கிறிஸ்டன் மற்றும் கேப் டன் தோனி ஆகியோரிடம் ஆலோசி த்த பின் தான் சிகிட்சை பெற்றேன். இவ்வாறு அவர் கூறினார். 

-------------------------------

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்