முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

4-வது ஒருநாள்: பொல்லார்டு சதத்தால் மே.இ.தீவு வெற்றி

ஞாயிற்றுக்கிழமை, 25 மார்ச் 2012      விளையாட்டு
Image Unavailable

 

செயின்ட் லூசியா, மார்ச். 25 - ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக செயி ன்ட் லூசியா தீவில் நடைபெற்ற 4-வது ஒரு நாள் போட்டியில் மே.இ.தீவு அணி 42 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்தத் தொடர் 2- 1 என்ற கணக்கில் உள்ளது. இந்தப் போட்டியில் மே.இ.தீவு அணியின் முன்னணி வீரரான பொல்லார்டு அதிரடியாக ஆடி 70 பந்தில் 102 ரன்னை எடுத்தார். அவருக்கு பக்கபலமாக சார் லஸ், பரத், ரஸ்செல்,கேப்டன் சம்மி மற்றும் எம். பிராவோ ஆகியோர் ஆடி னர். 

பெளலிங்கின் போது, முன்னணி வேக ப் பந்து வீச்சாளர்களான ரோச், டி.பிரவோ, சம்மி மற்றும் ரஸ்செல் தலா 2 விக்கெட் எடுத்தனர். நரைன் அவர்களுக்கு ஆதரவாக பந்து வீசினார். மே.இ,தீவு மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 4-வது ஒரு நா ள் போட்டி செயின்ட் லூசியா தீவில் நேற்று பகலிரவு ஆட்டமாக நடந்தது. 

முன்னதாக இதில் டாசில் வெற்றி பெ ற்ற மே.இ.தீவு அணி பேட்டிங்கை தே ர்வு செய்தது. அந்த அணி சார்பில், சார் லஸ் மற்றும் பரத் இருவரும் ஆட்டத் தை துவக்கினர். 

மே.இ.தீவு அணி இறுதியில் நிர்ணயிக்க ப்பட்ட 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பி ற்கு 294 ரன்னைக் குவித்தது.அந்த அணி சார்பில் ஒரு வீரர் சதமும், 5 வீரர்கள் கால் சதமும் அடித்தனர். 

மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான பொல் லார்டு அதிரடியாக ஆடி, 70 பந்தில் 102 ரன்னைக் குவித்தது ஆட்டத்தின் சிறப்ப ம்சமாகும். இதில் 5 பவுண்டரி மற்றும் 8 சிக்சர் அடக்கம். 

அடுத்தபடியாக, துவக்க வீரர் பரத் 31 பந்தில் 41 ரன்னை எடுத்தார். தவிர, சார் லஸ் 37 ரன்னையும், எம். பிராவோ 25 ரன்னையும், ரஸ்செல் 32 பந்தில் 34 ரன் னையும், கேப்டன் சம்மி 13 பந்தில் 31 ரன்னையும், எடுத்தனர். 

ஆஸ்திரேலிய அணி தரப்பில், முன்ன ணி வேகப் பந்து வீச்சாளரான பிரட்லீ 72 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடு த்தார். தவிர, வாட்சன், டொகெர்டி ஆகியோர் தலா 2 விக்கெட்டும், மெக் கே 1 விக்கெட்டும் எடுத்தனர். 

ஆஸ்திரேலிய அணி 295 ரன்னை எடுத் தால் வெற்றி பெறலாம் என்ற இலக் கை மே.இ.தீவு அணி வைத்தது. ஆனா ல் அடுத்து களம் இறங்கிய அந்த அணி 46.3 ஓவரில் அனைத்து விக்கெட்டையு ம் இழந்து 252 ரன்னை எடுத்தது. 

இதனால் மே.இ.தீவு அணி இந்த 4 -வது போட்டியில் 42 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடர் 2- 1 என்ற கணக்கில் உள்ளது. 

ஆஸ்திரேலிய அணி சார்பில், பிரட்லீ 48 பந்தில் 59 ரன்னையும், டி. ஹஸ்சே 54 பந்தில் 57 ரன்னையும், வாட்சன் 28 ரன்னையும், பாரெஸ்ட் 24 ரன்னையும், பெய்லி 25 ரன்னையும், மைக் ஹஸ்சே 26 ரன்னையும் எடுத்தனர். 

மே.இ.தீவு அணி தரப்பில் ரஸ்செல் 34 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத் தார். தவிர, ரோச், டி.பிராவோ, சம்மி ஆகியோர் தலா 2 விக்கெட்டும், நரை ன் 1 விக்கெட்டும் எடுத்தனர். இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக பொல் லார்டு தேர்வு செய்யப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்