முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வட்டு எறிதல்: ஒலிம்பிக் போட்டிக்கு சீமா அன்டில் தகுதி

ஞாயிற்றுக்கிழமை, 25 மார்ச் 2012      விளையாட்டு
Image Unavailable

 

புதுடெல்லி, மார்ச் 26 - லண்டன் ஒலிம்பிக் போட்டியின் வட்டு எறிதல் பிரிவில் பங்கேற்க  இந்திய வீராங்கனை சீமா அன்டில் தகுதிபெற்றுள்ளார். கடந்த 6 மாதங்களாக ஒலிம்பிக் போட்டிகளுக்காக பயிற்சியாளர் டோனி சியாரெல்லியிடம் பயிற்சிகளை பெற்றுவருகிறார் இந்திய வட்டு எறிதல் வீராங்கனை சீமா அன்டில். இந்நிலையில் அமெரிக்காவில் நடைபெற்ற யூனிவர்சிட்டி ஆப் கலிபோர்னியா ஓபன் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொண்ட சீமா அன்டில், தனது முதலாவது த்ரோவிலேயே 62.60 மீட்டர் தூரம் வட்டை எறிந்து ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். இதன் மூலம் வட்டு எறிதல் பிரிவில் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்ற இரண்டாவது வீராங்கனையானார் சீமா அன்டில். 

இதுகுறித்து கருத்து தெரிவித்த சீமா அன்டில், எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. என்னால் 64 மீட்டர் வரை வட்டை எறிய முடியும் என்ற நம்பிக்கை அன்றைய தினம் இருந்தது. ஆனால் பயிற்சியாளரின் ஆலோசனையின்படி அன்றைய தினம் நான் கூடுதலாக எதையும் செய்யவில்லை. தற்போது எனது கவனம் முழுவதும் ஒலிம்பிக் போட்டிகளிலேயே உள்ளது. ஒலிம்பிக் போட்டிகளுக்காக இன்னும் நிறைய பயிற்சிகளை மேற்கொள்ள இருக்கிறேன். எனக்கு இந்த பயிற்சிகளை அளித்த மிட்டல் சாம்பியன்ஸ் டிரஸ்ட்டிற்கு நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன். ஏனென்றால் எனக்கு உலகின் மிகச் சிறந்த வெளிநாட்டு பயிற்சியாளரை நியமித்து எனது பயிற்சிக்காக அனைத்து ஏற்பாடுகளையும் அவர்கள்தான் செய்துள்ளனர்.  அவர்களுடைய இந்த சிறப்பான ஏற்பாடுகளின் காரணமாகத்தான் நான் கடந்த 7 ஆண்டுகளுக்கு பிறகு வட்டு எறிதலில் 62 மீட்டர் தூரத்தை கடந்துள்ளேன். 

பயிற்சியாளர் டோனி கடந்த சில மாதங்களாகவே சீமாவுக்கு சிறப்பான பயிற்சிகளை கொடுத்து வருகிறார். 

இந்த ஆண்டின் துவக்கத்தில் மற்றொரு இந்திய வட்டு எறிதல் வீராங்கனையான கிருஷ்ண பூனியா லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆண்கள் வட்டு எறிதல் பிரிவில் இந்தியாவின் சார்பாக விகாஸ் கவுடா ஒலிம்பிக்கில் கலந்துகொள்கிறார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago