முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இங்கிலாந்திற்கு டெஸ்ட்: ஜெயவர்த்தனே அபார சதம்

செவ்வாய்க்கிழமை, 27 மார்ச் 2012      விளையாட்டு
Image Unavailable

 

காலே, மார்ச். 27 - இங்கிலாந்திற்கு எதிராக காலே நகரில் துவங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் இலங்கை அணி 8 விக்கெட் இழப்பிற்கு 289 ரன்னை எடுத் து இருக்கிறது. இலங்கை அணியின் முதல் இன்னிங்சி ல் கேப்டன் ஜெயவர்த்தனே மட்டும் நிலைத்து ஆடி சதம் அடித்தார். அவரது ஆட்டத்தால் அந்த அணி கெளரவமான ஸ்கோரை எட்டியது. மற்ற வீரர்கள் குறைந்த ரன்னில் ஆட்டம் இழந்தனர். இங்கிலாந்து அணி தரப்பில், முன்னணிவேகப் பந்து வீச்சாளரான ஆண்டர்சன் அபாரமாக பந்து வீசி 3 முக்கிய விக்கெ ட்டைக் கைப்பற்றி இலங்கை அணியி ன் ரன் குவிப்பைக் கட்டுப் படுத்தினார். பிராட் மற்றும் படேல் ஆகியோர் அவ ருக்கு ஆதரவாக பந்து வீசினர். 

கேப்டன் ஸ்ட்ராஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி இலங்கையில் சுற்று ப் பயணம் மேற்கொண்டு கேப்டன் ஜெயவர்த்தனே தலைமையிலான அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. 

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிக ளுக்கு இடையேயான முதலாவது டெ ஸ்ட் போட்டி காலே சர்வதேச கிரிக்கெ ட் மைதானத்தில் நேற்று துவங்கியது. 

முன்னதாக இதில் டாசில் வெற்றி பெ ற்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அந்த அணி சார் பில், திரிமன்னே மற்றும் தில்ஷான் இருவரும் ஆட்டத்தை துவக்கினர். 

இலங்கை அணி இறுதியில் முதல் நாள் முடிவில் முதல் இன்னிங்சில் 90 ஓவரி ல் 8 விக்கெட் இழப்பிற்கு 289 ரன்னை எடுத்தது. இதில் ஒரு வீரர் சதம் அடித் தார். மற்ற வீரர்கள் சொதப்பி விட்டனர். 

இலங்கை அணியின் கேப்டனான ஜெ யவர்த்தனே பொறுப்புடன் ஆடி சதம் அடித்து இறுதிவரை ஆட்டம் இழக்கா மல் இருந்தது ஆட்டத்தின் சிறப்பம்ச மாகும். இதனால் அந்த அணி 200 ரன் னைத் தாண்டியது. 

ஜெயவர்த்தனே 290 பந்துகளைச் சந்தித் து 168 ரன்னை எடுத்தார். இதில் 20 பவு ண்டரியும், 3 சிக்சரும் அடக்கம். சண்டி மால் 48 பந்தில் 27 ரன்னையும், பிரசன் னா 23 ரன்னையும், சமரவீரா 20 ரன் னையும், ரன்டிவ் 12 ரன்னையும் எடுத்த னர். வெலிகேடரா 10 ரன்னுடன் களத் தில் இருந்தார். 

இங்கிலாந்து அணி தரப்பில், முன்னணி வேகப் பந்து வீச்சாளரான ஆண்டர்சன் வெகு நேர்த்தியாக பந்து வீசி 56 ரன் னைக் கொடுத்து 3 விக்கெட் எடுத்தார். தவிர, படேல் 2 விக்கெட்டையும், பிராட் 1 விக்கெட்டும் எடுத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்