முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென்கொரிய முதலீடுகள் இந்தியாவுக்கு முன்னுரிமை: பிரதமர்

செவ்வாய்க்கிழமை, 27 மார்ச் 2012      இந்தியா
Image Unavailable

சியோல், மார்ச் 27 - தென்கொரிய முதலீடுகள் இந்தியாவுக்கு முன்னுரிமையானவை என்று பிரதமர் மன்மோகன்சிங் கூறியுள்ளார். நான்கு நாள் சுற்றுப்பயணமாக தென்கொரியா சென்றுள்ள இந்திய பிரதமர் மன்மோகன்சிங் பல்வேறு முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். சியோல் நகரில் தென்கொரிய தொழில் அதிபர்கள் கூட்டத்தில் பிரதமர் மன்மோகன்சிங் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், தென்கொரிய முதலீடுகள் இந்தியாவுக்கு முன்னுரிமையானவை என்றார். இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் வெளிநாட்டு முதலீடுகள் ஊக்குவிக்கப்பட்டு வருகின்றன. எனவே இந்தியாவில் வெளிநாட்டு முதலீடுகள் குவிந்தவண்ணம் உள்ளன. தென்கொரியாவிலிருந்து வரும் முதலீடுகளை நாங்கள் வரவேற்கிறோம். இந்தியாவில் முதலீடு செய்பவர்களின் குறைகளை போக்க உரிய நடவடிக்கைகளை இந்திய அரசு எடுத்துவருகிறது என்றும் அவர் கூறினார். இந்தியாவில் வர்த்தக சூழலை அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகளையும் இந்திய அரசு செய்துவருகிறது என்றும் அவர் கூறினார். ஒரிசா மாநிலத்தில் தென்கொரியாவைச் சேர்ந்த போஸ்கோ ஆலையை நிறைவேற்றுவதற்கு எதிர்ப்புகள் அதிகரித்துவரும் சூழ்நிலையில் பிரதமர் மன்மோகன்சிங் இவ்வாறு உறுதியளித்தார். போஸ்கோ திட்டத்தை நிறைவேற்றுவதற்கான சாதகமான நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொள்ளும் என்றும் அவர் கூறினார். 

மாநில அரசுகள் வெளிநாட்டு முதலீடுகளுக்கு ஊக்கம் அளித்து வருகின்றன. இதற்கு மத்திய அரசு உறுதுணையாக இருந்து வருகிறது. எனவே தென்கொரிய முதலீட்டாளர்கள் இந்தியாவில் அதிகமான முதலீடுகளை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றும் அவர் கூறினார். பொதுவாக எங்களது செயல்பாடுகல் மெதுவாகத்தான் இருக்கும். ஆனால் அவை நிச்சயமாக நிறைவேற்றப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.  தொழில் திட்டங்கள் தொடர்பான பிரச்சனைகள் கருத்துவேறுபாடுகள் பலமான சட்டத்தின் ஆட்சிமூலம் அவற்றுக்கு தீர்வு காணப்படும் என்றும் அவர் கூறினார். இந்தியாவில் ஸ்திரமான, லாபகரமான, நீண்டகால முதலீடுகளுக்கு வளமையான வாய்ப்புகள் உள்ளன. எனவே தென்கொரிய தொழில் அதிபர்கள் இந்தியாவில் முதலீடு செய்ய முன்வருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago