முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விசா கட்டணத்தை உயர்த்தியது அமெரிக்கா

வெள்ளிக்கிழமை, 30 மார்ச் 2012      இந்தியா
Image Unavailable

 

வாஷிங்டன், மார்ச்.30  - அமெரிக்காவுக்கு வேலை தேடி வருபவர்களுக்கான விசா கட்டணத்தை அந்நாடு உயர்த்தியுள்ளது. இதனால் இந்தியர்கள் கடுமையாக பாதிப்படைவார்கள் என்று தெரிகிறது. இந்தியாவில் செயல்பட்டு வரும் பெரும்பாலான கணிப் பொறித்துறை நிறுவனங்களில் ஏராளமானவை அமெரிக்காவை மையமாக கொண்டு வர்த்தகம் செய்து வருகிறது. இந்நிலையில் அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சகம் அந்நாட்டிற்கு வேலை தேடி வருபவர்களுக்கான எச் 1 பி விசா கட்டணத்தை உயர்த்தி அறிவித்துள்ளது. இது குறித்து அந்நாட்டு வெளியுறவு துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, 

அமெரிக்க குடியுரிமை மற்றும் வெளியுறவு துறை அமைச்சகம் அந்நாட்டிற்கு செல்பவர்களுக்கான விசா குறித்த கட்டண விவரங்களை வெளியிட்டுள்ளது. இதில் நிறுவனங்கள் மூலமாக பணிக்கு செல்வோர் பதிவு செய்யும் விசா கட்டணத்தை 325 டாலரில் இருந்து 2 ஆயிரம் டாலராக உயர்த்தி அறிவித்துள்ளது. 

50 அல்லது அதற்கு மேற்பட்ட ஊழியர்களை கொண்ட நிறுவனத்திற்கு ஹெச் 1 பி அல்லது எல் 1 வகையில் இந்த விசா கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. ஒன்று முதல் 25 முழு நேர ஊழியர்களை கொண்ட பணியாளர்களுக்கு அந்நாட்டு அமைச்சகம் 750 டாலர் கட்டணம் வசூலிக்கிறது. 26 அல்லது அதற்கு மேற்பட்ட ஊழியர்களை கொண்ட நிறுவனத்திற்கு ஆயிரத்து 500 டாலர் கட்டணமாக வசூலிக்கப்பட்டது. இந்த பட்டியலில் தற்போது கூடுதலாக ஆள்மாறாட்டம் மற்றும் முறைகேடுகளை தடுக்கும் கட்டணத்திற்காக கூடுதல் 500 டாலர் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

15 தினங்களுக்குள் தங்களது மனுக்களை ஊழியர்கள் பரிசீலனை செய்ய வேண்டுமென விரும்பினால் கூடுதலாக 1,225 டாலர்கள் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் செயல்படும் பெரும்பாலான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் 60 சதவீத வருவாய் அமெரிக்காவை சார்ந்து வருகிறது. இந்த நிதியாண்டிற்கான ஹெச் 1 பி வேலை விசாவிற்கு அக்டோபர் மாதம் மனு செய்தவர்களுக்கு ஏப்ரல் மாதம் அங்கீகாரம் அளிக்கப்படும். 2013 ம் ஆண்டில் மட்டும் வேலைக்காக விசா கேட்டு விண்ணப்பித்தவர்கள் 63 ஆயிரம் பேர் ஆவர். இது கடந்த ஆண்டை விட அதிகமாகும். 

மேலும் கூடுதலாக முதல் 20 ஆயிரம் மனுதாரர்களுக்கு முதுகலை மற்றும் அதற்கு அதிகமாக படித்தவர்களுக்கு தனி நபர்களுக்கு விலக்கு அளிக்கப்படும் என தெரிகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் இருந்துதான் ஏராளமானோர் ஐ.டி. துறையில் அமெரிக்காவுக்கு வேலை விசா கேட்டு விண்ணப்பித்துள்ளனர். அந்நாடு தற்போது அறிவித்துள்ள விசா கட்டண உயர்வு காரணமாக இந்தியர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என ஐ.டி. துறை வல்லுனர்கள் கருதுகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்