முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவிலிருந்து நகைகளுடன் வந்தவரிடம் விசாரணை

சனிக்கிழமை, 31 மார்ச் 2012      தமிழகம்
Image Unavailable

 

ஆலந்தூர், மார்ச்.31 - சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை செல்லவிருந்த தம்பதியிடம் ரூ.75 லட்சம் மதிப்புள்ள தங்கக்கட்டிகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அவர்களை கைது செய்தனர். சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து மதுரைக்கு தங்கக்கட்டி கடத்தப்படுவதாக சுங்கத்துறைக்கு ரகசிய தகவல் வந்தது. இதன் பேரில், சுங்கத்துறை அதிகாரிகள் விமான நிலையத்தில் பயணிகளை தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

அமெரிக்காவில் இருந்து நேற்றுஅதிகாலை 4.30 மணிக்கு விமானம் ஒன்று சென்னை விமான நிலையத்திற்கு வந்தது. அதில் இருந்து இறங்கிய பயணிகளிடம் சுங்க இலாகா அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது தேனி பெரியகுளத்தைச் சேர்ந்த கம்ப்யூட்டர் என்ஜினீயர் கண்ணன் (40) என்பவரின் 'பேண்ட்' பை, அவரது மனைவி மோகனவள்ளியின் ஹேண்ட் பேக் ஆகியவற்றில் 2 கிலோ 300 கிராம் எடையுள்ள தங்க நகை, தங்க பிஸ்கெட்டுகள் இருந்தன. இவற்றின் மதிப்பு ரூ.75 லட்சம் ஆகும். சுங்க அதிகாரிகள் அவர்களை அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார்கள். தங்க பிஸ்கட்டிற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் தங்கக்கட்டிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் தம்பதியை விமான நிலைய காவல்துறையிடம் ஒப்படைத்தனர். அவர்களிடம் சுங்கத்தீர்வை மற்றும் அபராதம் வசூலிக்கப்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். வழக்கமாக ஒருவர் 6 மாதம் வெளிநாட்டில் தங்கி இருந்தால் 10 கிலோ தங்கத்தை இந்தியா கொண்டு வரலாம். அவர்கள் தங்கம் கொண்டு வருவதற்கு முன்பே சுங்கத் தீர்வை கட்டவேண்டும். கண்ணன் தம்பதி சுங்க இலாகாவுக்கு 2 கிலோ தங்கம் கொண்டு வருவதற்கான சுங்கத் தீர்வை செலுத்தாததால்தான் பிடிபட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்