முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஷ்யாவில் இந்துக் கோயிலை இடிக்க நீதிமன்றம் உத்தரவு

ஞாயிற்றுக்கிழமை, 1 ஏப்ரல் 2012      உலகம்
Image Unavailable

 

மாஸ்கோ, ஏப். - 1 - ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க் ரோட்டில் உள்ள மிகப் பெரிய இந்துக் கோயில் இடிக்கப்படவுள்ளது.  மிகப் பெரிய கலாச்சார மையமாக திகழும் இந்த கோயிலை அமைக்க போடப்பட்ட 49 ஆண்டு கால நில குத்தகை ஒப்பந்தத்தை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது ரஷ்ய நீதிமன்றம். இது தொடர்பாக அக்கோயிலின் தலைவர் சுரேன் கூறுகையில், இந்த விவகாரத்தில் இந்திய ஜனாதிபதி மற்றும் ரஷ்ய அதிபரின் உதவியை நாடவுள்ளோம். இந்த விவகாரத்தில் இந்தியா தலையிட்டு உதவி செய்யும் என்று எதிர்பார்க்கிறோம். இங்கு கோயில் கட்டுவதற்காக நில உரிமையாளருடன் 49 ஆண்டுகள் ஒப்பந்தம் செய்திருந்த போது இப்போது சட்டத்திற்கு புறம்பாக கோயிலை இடிக்க உத்தரவு போடப்பட்டுள்ளதை இந்துக்களுக்கு எதிரான ஓர் அங்கமாக இருக்கிறது என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்