முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மியான்மரில் புதிய அத்தியாயம் உருவாகும்: ஆங்சன் சூகி பேச்சு

செவ்வாய்க்கிழமை, 3 ஏப்ரல் 2012      உலகம்
Image Unavailable

 

யங்கூன்,ஏப்.- 3 - மியான்மிர் நாட்டில் நீண்டகாலமாக நடந்து வந்த அடக்கு முறைக்கு முற்றுப்புள்ளி ஏற்பட்டு புதிய அத்தியாயம் உருவாகும் என்று மியான்மர் நாட்டின் எதிர்க்கட்சி பெண் தலைவர் ஆங்சன் சூகி கருத்து தெரிவித்துள்ளார். நம்நாட்டின் கிழக்கு பகுதியில் மியான்மர் நாடு உள்ளது. இந்த நாட்டின் பெயர் முதலில் பர்மா என்று அழைக்கப்பட்டது. மியான்மரில் இன்னும் தமிழர்கள் ஏராளமானோர் வாழ்ந்து வருகிறார்கள். இந்த நாட்டில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக ராணுவ ஆட்சி இருந்து வருகிறது. ராணுவ ஆட்சியை ஒழித்துக்கட்ட எதிர்க்கட்சி பெண் தலைவர் ஆங்சன் சூகி பெரும் முயற்சிகளை மேற்கொண்டார். தொடர்ந்து போராட்டம் நடத்தினார். இதனால் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் சுமார் 22 ஆண்டுகள் சிறையில் இருந்தார். இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளின் வலியுறுத்தல் காரணமாக ஆங்சன் சூகி விடுதலை செய்யப்பட்டார். இந்தநிலையில் மியான்மர் பாராளுமன்றத்தில் 45 இடங்களுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. நேற்றுமுன்தினம் தேர்தல் நடந்தது. அன்றே ஓட்டுக்கள் எண்ணப்பட்டன. இதில் 45 இடங்களில் போட்டியிட்ட ஆங்சன் சூகி கட்சி 44 இடங்களில் வெற்றிபெற்றது. ஆங்சன் சூகியும் அமோக வெற்றிபெற்றார். வெற்றிக்களிப்பில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கியதோடு அவர்களிடையே உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில் மியான்மரில் அடக்குமுறை முற்றிலும் ஒழிக்கப்பட்டு புதிய அத்தியாயம் உருவாகும் என்றார். இது நமது வெற்றி அல்ல. மக்களின் வெற்றியாகும். இனி நாட்டின் அரசியலில் அவர்கள்தான் ஈடுபட வேண்டும். இந்த வெற்றியானது புதிய அத்தியாயத்தின் ஆரம்பமாகும் என்றார். அங்கு கூடியிருந்தவர்கள் ஆங்சன் சூகி பெயரை முழக்கமிட்டு தங்களுடைய கைகளை உயர்த்தி வெற்றிச்சின்னமான இரண்டு விரல்களை காட்டினர். ​

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்