முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரை இறுதியில் பாகிஸ்தானை வீழ்த்தும் இந்தியா - பாண்டிங்

சனிக்கிழமை, 26 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

அகமதாபாத், மார்ச். 26 - உலகக் கோப்பையை இந்தியா உறுதியாகக் கைப்பற்றும் என்று ஆஸ் திரேலிய கிரிக்கெட் அணி கேப்டன் ரிக்கி பாண்டிங் நம்பிக்கை தெரி வித்து உள்ளார். இது பற்றிய விபரம் வருமாறு - அகமதாபாத்தில் நேற்று முன் தினம் நடைபெற்ற உலகக் கோப்பை காலிறுதி போட்டியில் இந்தியா நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா வை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி கண்டது. அரை இறுதிக்கு தகுதி பெற்றது. 

இதன் மூலம் மொகாலியில் வரும் 30 -ம் தேதி நடைபெறும் அரை இறுதிபோட்டியில் இந்தியா, பரம எதிரியான பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. 

தொடர்ந்து 3 முறை உலகக் கோப்பையை கைப்பற்றி சாதனை படை த்த ஆஸ்திரேலியா இந்த முறை காலிறுதியிலேயே வெளியேறி இருக் கிறது. இந்த அதிர்ச்சியில் இருக்கும் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பா  ண்டிங் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது - 

இந்தத் தோல்வி மிகுந்த வருத்தத்தை தருகிறது. இதுவே நான் பங்கேற் கும் கடைசி உலகக் கோப்பை போட்டியாகும். இதிலும் கோப்பை யை கைப்பற்ற வேண்டும் என்ற உறுதி பூண்டு இருந்தேன். ஆனால் அது நடக்கவில்லை. 

எனது கடைசி போட்டியில் நான் சதம் அடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தக் காலிறுதியில் இந்திய அணி சிறப்பாக ஆடியது. யுவராஜ் , சுரே ஷ் ரெய்னா ஜோடியை பிரிக்க முடியாமல் போனதே எங்கள் தோல் விக்கு காரணம். அவர்கள் இருவரும் மிகச் சிறப்பாக விளையாடினா ர்கள். 

நாங்கள் எதிர்பார்த்ததை விட 20 முதல் 30 ரன்கள் குறைவாகவே குவி க்க முடிந்தது. இதுவும் எங்கள் தோல்விக்கான மற்றொரு காரணம். குறிப்பிட்ட இடைவெளியில் இந்திய வீரர்களின் விக்கெட்டுகளை எங் கள் பந்து வீச்சாளர்கள் வீழ்த்த தவறியதும் எங்களுக்கு இழப்பு. 

அரை இறுதியில் இந்தியா, பாகிஸ்தானை வீழ்த்தும் என்பதே எங்களி ன் கணிப்பாகும். அது மட்டுமின்றி இறுதிப்போட்டியிலும் சிறப்பாக விளையாடி இந்தியா இந்த முறை கோப்பையை கைப்பற்றும். இவ் வாறு அவர் கூறினார். 

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 2 -வது காலிறுதி ஆட்டம் குஜராத் மாநிலத்தின் தலைநகரான அகமதாபாத்தில் உள்ள சர்தார் படேல் அரங்கத்தில் நேற்று முன் தினம் நடந்தது. 

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 260 ரன்னை எடுத்தது. அந்த அணிக் கேப்டனான ரிக்கி பாண்டிங் சதம் அடித்தார். 

பின்பு ஆடிய இந்திய அணி 47 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 261 ரன் னை எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூல ம் அரை இறுதிக்குள் நுழைந்தது. 

இதில் டெண்டுல்கர், காம்பீர், யுவராஜ் சிங் , கோக்லி மற்றும் ரெய் னா ஆகியோர் நன்கு ஆடி அணிக்கு வெற்றி தேடித் தந்தனர். கடைசி கட்டத்தில் யுவராஜ் சிங் மற்றும் ரெய்னா ஜோடி நன்கு ஆடி அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்