முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மியான்மரில் அமைதியான தேர்தல் ஐ.நா.பொதுச் செயலாளர்பாராட்டு

புதன்கிழமை, 4 ஏப்ரல் 2012      உலகம்
Image Unavailable

ஐ.நா,ஏப்.- 5 - மியான்மர் நாட்டு பாராளுமன்ற இடைத்தேர்தல் அமைதியாக நடந்ததற்கு அந்த நாட்டு மக்களை ஐக்கிய நாடுகள் சபை பொதுச்செயலாளர் பான் கீ மூன் பாராட்டி உள்ளார்.  மியான்மர் நாட்டில் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த சூழ்நிலையில் அங்கு பாராளுமன்றத்தில் 45 இடங்களுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் ஆங் சூன் தலைமையிலான எதிர்க்கட்சி 43 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. மேலும் ராணுவ ஆட்சி நடக்கும் நாட்டில் தேர்தல் அமைதியாகவும் நேர்மையாகவும் நடந்ததாக கூறப்படுகிறது. இதற்கு பான் கீ மூன் பாராட்டு தெரிவித்துள்ளார். மியான்மர் நாட்டில் மேற்கொள்ளப்படவிருக்கும் சீர்திருத்தத்திற்கு இந்த தேர்தல் முடிவு ஒரு முன்னோடியாகும் என்றும் அவர் கூறியுள்ளார். மியான்மர் நாட்டில் ராணுவ ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து அங்கு ஜனநாயகத்தை ஏற்படுத்தும் நடவடிக்கையாக பாராளுமன்றத்தில் 48 இடங்களுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. தேர்தல் பார்வையாளர்களாக ஐக்கிய நாடுகள் சபை பிரதிநிதிகள் சென்றிருந்தனர். ஒரு சில இடங்களில் சிறு சிறு வன்முறை சம்பவங்கள் நடந்தாலும் பொதுவாக தேர்தல் அமைதியாக நடந்தது. அதோடுமட்டுமல்லாது மியான்மர் அதிபர் தெய்ன் செய்னின் நடவடிக்கைகளும் அறிக்கைகளும் ஜனநாயகத்தை கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை ஊக்குவிப்பதாக உள்ளது என்றும் பான் கி மூன் மேலும் கூறியுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்