முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுப்பிரமணியம் சாமியின் புகார் மனு மாற்றம்

சனிக்கிழமை, 26 மார்ச் 2011      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி, மார்ச்.26 - 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியம் சாமி தாக்கல் செய்த புகார் மனுவை சிறப்பு நீதி மன்றத்திற்கு மாற்றி டெல்லி கோர்ட்டு ஒன்று உத்தரவிட்டுள்ளது.

டெல்லியில் மாவட்ட நீதிபதி பிரதீபா ராணி முன்பு ஜனதா கட்சித்தலைவர் சுப்பிரமணியம் சாமி புகார்மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

2 ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் உரிமம் பெற்ற கம்பெனிகள் தங்களது பங்குகளை வெளிநாட்டு கம்பெனிகள் சிலவற்றிற்கு விற்றுள்ளன என்றும் இதனால் தேச பாதுகாப்புக்கு ஆபத்து நேரும் என்றும் இது குறித்து விசாரணை  நடத்த வேண்டும் என்றும் கோரி டெல்யில் உள்ள மாவட்ட நீதிபதி பிரதீபா ராணி முன்பு தனி நபர் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

மேலும் சி.பி. ஐ.விசாரணையில் பொது  வழக்கிறஞராக தன்னையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் அந்த மனுவில் கேட்டுக்கொண்டிருந்தார்.

இந்த நிலையில் ஸ்பெக்டரம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் விசாரிக்க நீதிபதி ஓ.பி. சைனி தலைமையில் சிறப்பு நீதி மன்றம் ஒன்றை சுப்ரீம் கோர்ட்டு நியமித்துள்ளது.

இந்த கோர்ட்டில் ஸ்பெக்ட்ரம் தொடர்பான வழக்குகள் அனைத்தும் விசாரிக்கப்படுவதால் தனது மனுவையும் இந்த சிறப்பு நீதிமன்றத்திற்கே மாற்றி விடலாம் என்றும் மாவட்ட நீதிபதியின் முன்பு சுப்பிரமணியம் சாமி நேரில் ஆஜராகி கோரிக்கை விடுத்தார்.

இவரது ரேண்டுகோளை ஏற்று இவரது மனுவை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி மாவட்ட நீதிபதி உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்