முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உரிய மதிப்பு அளித்தால்தான் அமெரிக்காவுடன் நல்லுறவு-சர்தாரி

சனிக்கிழமை, 7 ஏப்ரல் 2012      உலகம்
Image Unavailable

 

லாகூர், ஏப்.- 7 - உரிய மதிப்பை அளித்தால்தான் அமெரிக்காவுடனான உறவு வலுவடையும் என்று பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அமெரிக்க வெளியுறவுத்துறை துணை அமைச்சர் தாமஸ் நிடெஸ் பாகிஸ்தான் அதிபர் சர்தாரியை சந்தித்தார். அப்போது பாகிஸ்தான் அதிபர் சர்தாரி அமெரிக்காவுடனான உறவு குறித்து தெரிவித்ததாவது:- 

பயங்கரவாதிகளை ஒழிக்கிறேன் என்ற பெயரில் பாகிஸ்தான் பழங்குடி இன மக்கள் வசிக்கும் பகுதிகளில் ஆளில்லா விமானம் மூலம் அமெரிக்காவால் நடத்தப்படும் தாக்குதல்களில் அப்பாவிப் பொதுமக்கள் பலர் உயிரிழந்துள்ளனர். இது மிகவும் கவலையளிக்கும் விஷயமாகும். இதுபோன்ற விமானங்களுக்கு சொந்த நாட்டு விமான தளங்களிலேயே இடமளிப்பது நாட்டு மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தும். மேலும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நேட்டோ படையினர் நடத்திய வான்வழித் தாக்குதலில் 24 ராணுவ வீரர்கள் பலியானார்கள். இது நாட்டு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விசாரிக்க குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணை முடிந்தபிறகே நேட்டோ படைகளுக்கு பாகிஸ்தான் வழியாக பாதையை திறந்துவிடுவது குறித்து முடிவு எடுக்கப்படும். பாகிஸ்தான் -அமெரிக்கா இடையிலான உறவானது இரு நாடுகளுக்கும் பலனளிப்பதாக இருக்க வேண்டும் என்றும் பாகிஸ்தான் அதிபர் சர்தாரி  அமெரிக்க அமைச்சரிடம்  தமது குமுறலை வெளியிட்டார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்