முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹபீஸ் சயீது விவகாரம் பாகிஸ்தானின் உள்விவகாரம்: கிலானி

சனிக்கிழமை, 7 ஏப்ரல் 2012      உலகம்
Image Unavailable

 

இஸ்லாமாபாத், ஏப்.- 7 - லஷ்கர் இ தொய்பா அமைப்பின் நிறுவனர் ஹபீஸ் சயீது விவகாரம் பாகிஸ்தானின் உள்விவகாரம்  என்று அந்நாட்டு பிரதமர் யூசுப் ரசா கிலானி கூறியிருக்கிறார். இதுபற்றி மேலும் கூறிய அவர், தடைசெய்யப்பட்ட ஜமாத் உத் தவா இயக்கத்தின் தலைவரான ஹபீஸ் சயீதுக்கு எதிராக உறுதியான ஆதாரங்கள் ஏதும் இருந்தால் அதை பாகிஸ்தானிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் கிலானி அழுத்தந்திருத்தமாக கூறியிருக்கிறார். லஷ்கர் இ தொய்பா அமைப்பின் நிறுவனர் சயீதின் தலைக்கு ரூ. 50 கோடியை அமெரிக்கா நிர்ணயித்துள்ள இந்த நிலையில் மேற்கண்டவாறு கிலானி கருத்துக்கூறி இருக்கிறார். போதுமான ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் சயீதுக்கு எதிரான வழக்குகள் அனைத்தும் கடந்த காலத்தில் டிஸ்மிஸ் செய்யப்பட்டதையும் அவர் நினைவுகூர்ந்தார். எனவே இது பாகிஸ்தானின் உள் விவகாரம் என்று மீண்டும் ஒருமுறை கூறிய கிலானி, அவருக்கு எதிராக உறுதியான ஆதாரங்கள் இருந்தால் அதை பாகிஸ்தானிடம் தாருங்கள் என்றும் கேட்டுக்கொண்டார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago