முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நைஜீரிய குண்டு வெடிப்பில் 50 பேர் உடல் சிதறி பலி

செவ்வாய்க்கிழமை, 10 ஏப்ரல் 2012      உலகம்
Image Unavailable

அபுஜா, ஏப். - 10 - நைஜீரியாவில் நடந்த கார் குண்டு வெடிப்பில் 50 பேர் உயிரிழந்தனர். நைஜீரியாவின் வட பகுதியில் உள்ள கடுனா நகரில் உள்ள தேவாலயத்தில் நிறுத்தப்பட்டிருந்த 2 கார்களில் நிரப்பப்பட்ட குண்டுகள் வெடித்து இந்த சம்பவம் நடந்தது. ஈஸ்டர் திருநாள் ஞாயிற்றுக் கிழமை கொண்டாடப்பட்டது. அதை முன்னிட்டு இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளதாக பி.பி.சி. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலுக்கு எந்த இயக்கமும் பொறுப்பேற்று கொள்ளவில்லை. ஆனால் போஹோ கராம் இஸ்லாமிய தீவிரவாத இயக்கம்தான் இந்த தாக்குதலை நடத்தியிருக்க கூடும் என்று பி.பி.சி செய்தி நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது. ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு நைஜீரியாவின் பல்வேறு பகுதிகளில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்று பி.பி.சி ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. நைஜீரியாவின் வட பகுதியில் இஸ்லாமியர்களும், தென் பகுதியில் கிறிஸ்தவர்களும் அதிகளவில் வசித்து வருகின்றனர். நைஜீரியா அரசு இஸ்லாமிய சட்டம் இயற்ற வேண்டும். சிறையில் உள்ள இயக்க தலைவர்களை விடுவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேவாலயங்கள், மசூதிகள் போன்ற இடங்களில் போஹோ கராம் தீவிரவாத இயக்கத்தினர் அவ்வப்போது வெடிகுண்டு தாக்குதலை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்