முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா-பாக். பேச்சுவார்த்தை: அமெரிக்கா பாராட்டு

செவ்வாய்க்கிழமை, 10 ஏப்ரல் 2012      இந்தியா
Image Unavailable

வாஷிங்டன்,ஏப்.11 - இந்தியா-பாகிஸ்தான் இடையே திடீரென்று பேச்சுவார்த்தை நடந்ததை அமெரிக்கா வெகுவாக பாராட்டியுள்ளது. அஜ்மீர் தர்காவில் தொழுகை நடத்துவதற்காக பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி ஜர்தாரி வந்தார். அப்போது அவரும் பிரதமர் மன்மோகன் சிங்கும் தனியாக சந்தித்து பேசினர். பேச்சுவார்த்தைக்கு பின்னர் ஜர்தாரிக்கு மன்மோகன் சிங் விருந்து கொடுத்தார். இந்த விருந்தில் முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டனர். இந்த சந்திப்பின்போது இந்தியா-பாகிஸ்தான் உறவு தீவிரவாதிகள் மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுப்பதில்தான் உள்ளது என்று மன்மோகன் சிங் திட்டவட்டமாக கூறியதாக தெரிகிறது. இந்த தலைவர்களும் சந்தித்து பேசியதை அமெரிக்கா வெகுவாக பாராட்டி உள்ளது. பாகிஸ்தான் அதிபர் ஜர்தாரி அழைப்பை ஏற்று பாகிஸ்தானுக்கு செல்ல பிரதமர் மன்மோகன் சிங் சம்மதித்து இருப்பதும் இரு தலைவர்களும் டெல்லியில் சந்தித்து பேசியதையும் நாங்கள் வெகுவாக பாராட்டுவதோடு மகிழ்ச்சியும் அடைகிறோம் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரி விக்டோரியா நுலாந்து வாஷிங்டன்னில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்துள்ளார். இரண்டு நாடுகளும் மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் என்று நாங்கள் வெகுநாட்களாக கூறி வருகிறோம். இரண்டு நாட்டு தலைவர்களும் சந்தித்து பேசுவது அந்த நாடுகளுக்கு மட்டுமல்லாது அண்டை நாடுகளுக்கும் அங்கு வசிக்கும் மக்களுக்கும் ஒரு பாதுகாப்பான வாழ்க்கை அமையும். இந்த இருநாடுகளும் மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்கியிருப்பதை நாங்கள் பாராட்டுகிறோம். இதேபாதையில் இருநாடுகளும் தொடர்ந்து செல்லும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று நுலாந்து தெரிவித்தார். இருநாடுகளிடையே முதலில் சியாசின் பகுதி பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டும். இதற்கு அமெரிக்கா முடிந்த அளவு உதவி செய்யும். இதுகுறித்து இருநாடுகளுக்கும் நாங்கள் உறுதி அளித்துள்ளோம் என்று நுலாந்து மேலும் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்