முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தோனேஷியாவில் மீண்டும் பயங்கர பூகம்பம்

வியாழக்கிழமை, 12 ஏப்ரல் 2012      உலகம்
Image Unavailable

 

ஜாகர்த்தா,ஏப்.12 - இந்தோனேஷியாவில் மீண்டும் பூகம்பம். இந்த பூகம்பத்தின்  அளவு ரிக்டரில் 8.6 ஆக பதிவாகி இருந்தது. கட்டிடங்கள் குலங்கின. வீடுகளில் இருந்து மக்கள் அலறிக்கொண்டு தெருக்களுக்கு ஓடி வந்து தஞ்சம் புகுந்துள்ளனர். இலங்கை,மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனையொட்டி முதலில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. பின்னர் அது வாபஸ் பெறப்பட்டது. இருந்தபோதிலும் சுனாமி பீதியில் மக்கள் உள்ளனர். 

இந்தியாவுக்கு கிழக்கே இந்தோனேஷியா அமைந்துள்ளது. இந்த நாடு அடிக்கடி பூகம்பம் ஏற்படும் பகுதியில் அமைந்துள்ளது. கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்தோனேஷியாவில் உள்ள சுமத்ரா தீவுப்பகுதியில் பயங்கர பூகம்பம் ஏற்பட்டு சுனாமி வீசியதில் அந்த நாட்டில் லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். அந்த சுனாமி இந்தியாவையும் தாக்கியது. சுனாமியில் அந்தமான் நிகோபர் தீவுகள் மற்றும் தமிழகம் குறிப்பாக நாகைப்பட்டினம், கடலூர், சென்னை மற்றும் தமிழக கடல் பகுதியில் உள்ள நகரங்கள், ஊர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். அதன் பின்னர் சுமத்ரா பகுதியில் அடிக்கடி நிலநடுக்கும் ஏற்பட்டது. ஆனால் அந்த நிலநடுக்கம் அதிக அளவில் இல்லை. 

இந்தநிலையில் நேற்று இந்தோனேஷியாவில் பயங்கர பூகம்பம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டரில் 8.6 ஆக பதிவாகி இருந்தது. இந்தோனேஷியாவில் உள்ள சுமத்ரா தீவுப்பகுதியில் இந்த பூகம்பம் ஏற்பட்டுள்ளது. இந்த பூகம்பம் தொடர்ந்து 4 நிமிடங்கள் நீடித்தது என்று நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள பாண்டா தீவுப்பகுதிகளில் இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. பூகம்பத்தால் பயந்துபோன மக்கள் அலறியடித்துக்கொண்டு பெரும் பீதியில் வீடுகளில் இருந்து தெருக்களுக்கு ஓடி வந்துள்ளனர் என்றும் அந்த தகவல்கள் கூறுகின்றன. முதலில் நேற்றுக்காலையில் இந்தோனேஷியாவின் கடல் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 8.7 ஆக பதிவாகி இருந்தது. இதனையொட்டி இந்துமகா சமுத்திரப்பகுதி முழுமைக்கும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. இந்தியாவின் கடல்பகுதிகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. அந்தமான் நிகோபர் தீவுப்பகுதிகளுக்கு முதலில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. கடல் பகுதி தகவல் மையமான இந்திய தேசிய மையம் இந்த எச்சரிக்கையை விடுத்தது. சுனாமி பெரிய அளவில் சுனாமி தாக்கும் என்றும் இந்த மையம் எச்சரித்தது. இதனையொட்டி மேற்குவங்காளம், ஒரிசா, ஆந்திர, தமிழகம். கேரள ஆகிய மாநிலங்களில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. மக்கள் உஷார்படுத்தப்பட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்தமான் நிகோபர் தலைநகரான போர்ட்பிளேயருக்கு 2 விமானங்களில் விமானப்படையினர் அனுப்பப்பட்டுள்ளனர். 5 டன் நிவாரணப்பொருட்களும் அனுப்பப்பட்டுள்ளன. அண்டை நாடுகளான இலங்கை மற்றும் சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. இலங்கையில் தலைநகர் கொழும்பில் நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. அதனால் மக்கள் அலறயடித்துக்கொண்டு தெருக்களுக்கு ஓடி வந்தனர். தாய்லாந்து நாட்டில் உள்ள புகெத் பகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்டது. கடந்த 2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியில் இந்த நாடுகளும் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்தோனேஷியாவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பதால் அந்த நாட்டு மக்கள் பெரும் கவலையிலும் பீதியிலும் உள்ளனர். அங்கு கடந்த 2004-ம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சுனாமியில் சுமார் 2 லட்சம் பேர் பலினார்கள். அதேமாதிரி இந்தத்தடவையும் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர். மக்கள் வீடுகளை விட்டு அலறியடித்துக்கொண்டு ஓடி வந்தபோது உறவினர்கள், உடன்பிறப்புக்கள் இருக்கிறார்களை என்று தேடிக்கொண்டு வந்தனர். அப்போது இறைவனை அவர்கள் வழிபட்டு எங்களை காப்பாற்று என்று கூறினர். ஒருசில மக்கள் கடவுள் மிகப்பெரியவர், கடவுள் மிகப்பெரியவர் என்று கூறிக்கொண்டே வந்தனர். நேற்று ஏற்பட்ட இந்த பூகம்பத்தின் அளவு ரிக்டரில் 8.6 ஆக பதிவாகி இருந்தது என்று அமெரிக்க பூகம்ப ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது. ஆசெஹ் தீவுப்பகுதியில் இருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தூரத்தில் சுமார் 430 கிலோ மீட்டர் தூரத்திற்கு பூகம்பம் மையம் கொண்டியிருந்தது என்றும் அந்த ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இந்தோனேஷியா, இந்தியா,இலங்கை, ஆஸ்திரேலியா, மியான்மர், தாய்லாந்து, மாலத்தீவு, இந்துமகா சமுத்திர தீவுகள், மலேசியா, பாகிஸ்தான், சோமாலியா, ஓமன், இரான், வங்கதேசம், கென்யா, தென்னாப்பிரிக்கா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலும் சுனாமி தாக்குதல் இருக்கலாம் என்று பசிபிக் கடல் பிராந்தியத்தில் உள்ள ஹவாலி சுனாமி ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளதை அமெரிக்க பூகம்ப ஆராய்ச்சி மையம் உறுதி செய்துள்ளது. இந்தோனேஷியா பகுதி கடலில் அலைகள் 7 அடி உயரம் வரை வீசியது. ஆனால் பூகம்பத்தால் பெரிய அளவில் சேதம் இல்லை என்று முதலில் வந்த தகவல்கள் கூறுகின்றன. இருந்தபோதிலும் இரண்டாவது தடவையாக இந்தோனேஷியா சுனாமி எச்சரிக்கையை விடுத்தது. சுமத்ரா, மென்தவாய் தீவுப்பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி இந்தோனேஷியா நாட்டு அரசு கேட்டுக்கொண்டுள்ளது. பூகம்பத்தின்போது மண்சரிவு செங்குத்தாக இல்லாமல் சரிவாக இருந்ததால் அதிக அளவு கடல் தண்ணீரை தள்ளி சுனாமியை ஏற்படுத்தாது என்றும் பூகம்ப ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்தோனேஷியாவை அடுத்து மலேசியா,சிங்கப்பூர், தாய்லாந்து வங்கேதசம், இந்தியா ஆகிய நாடுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago