முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென்சீனக் கடல் பிரச்சனை - சீனா கடும் எதிர்ப்பு

வியாழக்கிழமை, 12 ஏப்ரல் 2012      இந்தியா
Image Unavailable

 

பெய்ஜிங், ஏப்.12 - தென் சீனக்கடல் அனைவருக்கும் பொது என்ற இந்தியாவின் கருத்துக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தென் சீனக்கடல் தனக்கே சொந்தம் என்று சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இந்நிலையில் இந்தியா தென் சீனக் கடல் உலகின் பொதுவான சொத்து என்று தெரிவித்துள்ளது. தென் சீனக் கடல் பகுதியில் எண்ணெய் வளமிக்க பல்வேறு தீவுகள் உள்ளன.  இந்த தீவுகளுக்கு புருனே,வியட்நாம், பிலிப்பைன்ஸ், மலேசியா உள்ளிட்ட பல நாடுகள் தங்களுக்கும் உரிமை இருப்பதாக கூறி வருகின்றன. தென்கிழக்கு ஆசிய பகுதியில் தென்சீனக் கடல் விவகாரம் பூதாகரமாகி வருகிறது. இந்நிலையில் தென் சீனக் கடல் பகுதி உலகின் பொது சொத்து என்று இந்தியா தெரிவித்துள்ளது சீனாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் இந்த கருத்துக்கு  சீனா தனது கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது. 

இது குறித்து சீன அரசின் பத்திரிகையான குளோபல் டைம்ஸில், தென் சீனக் கடல் பகுதி உலகின் பொது சொத்து என்று இந்தியா தெரிவித்துள்ளது தவறு. சர்ச்சைக்குரிய அந்த கடல் பகுதியில் சட்டப்படி பயணம் செய்யும் உரிமையும், வர்த்தகம் செய்யும் உரிமையும் பிற நாடுகளுக்கு உள்ளது. அதற்கு சீனா ஒரு நாளும் ஆட்சேபனை தெரிவித்தது இல்லை. ஆனால் அந்த உரிமைகள் சீனாவின் உரிமையை மீறும் வகையில் இருக்கக் கூடாது என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்