முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீனா வலுவான நாடாக மாறவில்லை: சீன அமைச்சர்

வெள்ளிக்கிழமை, 13 ஏப்ரல் 2012      உலகம்
Image Unavailable

பீஜிங், ஏப்.13 - சீனா இன்னும் வலுவான நாடாக மாறவில்லை என அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் லேயூசெங் கூறியுள்ளார். அமெரிக்காவிற்கு அடுத்து வலுவான நாடாக சீனா மாறி இருப்பதாக பரவலாக சொல்லப்படுகிறது. ஆனால் சீனா இன்னும் வலுவான நாடாக மாறவில்லை என அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் கூறியிருக்கிறார். சர்வதேச கல்வி கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டு அவர் பேசுகையில், சீனா பொருளாதார ரீதியாக சிறப்பாக முன்னேறியுள்ளது. ஆனாலும் இன்னும் சக்திவாய்ந்த நாடாக மாறவில்லை. அதற்கு இன்னும் பல முன்னேற்றங்களை காணவேண்டியுள்ளது. இப்போதும் கூட சீனாவிடம் பல குறைகள் உள்ளன. அவற்றையெல்லாம் போக்கிவிட்டு உலகில் அதிகாரம் படைத்த சக்தியாக மாறவேண்டும் அதற்கு இன்னும் வெகுதூரம் செல்லவேண்டியிருக்கிறது. உதாரணமாக சொல்வதாக இருந்தால் சீனா இப்போது உலக அளவில் டேபிள் டென்னிஸ் போட்டியில் வேண்டுமானால் தங்க பதக்கம் பெறலாம். ஆனால் இன்னும் கால்பந்து போட்டியில் தங்க பதக்கம் பெறும் நிலையில் இல்லை. கால்பந்திலும் தங்கபதக்கம் பெறும் நாடாக எப்போது மாறுகிறதோ அப்போது தான் சீனாவை வலுவான நாடு என்று கூறமுடியும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்