முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2004-2012 இந்தோனேசியா பூகம்பங்களின் ஒற்றுமை - வேற்றுமை

வெள்ளிக்கிழமை, 13 ஏப்ரல் 2012      உலகம்
Image Unavailable

 

ஜகார்தா, ஏப்.13 - இந்தோனேசியாவில் கடந்த 2004 ம் ஆண்டு ஏற்பட்ட அதி பயங்கர நிலநடுக்கத்திற்கும், நேற்று முன்தினம் ஏற்பட்ட பூகம்பத்திற்கும் இடையே நிறைய ஒற்றுமைகளும், ஓரிரு வித்தியாசங்களும் உள்ளன என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 2004 ம் ஆண்டு ஏற்பட்ட மிக பயங்கரமான நிலநடுக்கமானது பெரும் சுனாமி பேரலைகளை கொண்டு வந்து இந்திய பெருங்கடல் நாடுகளை சீரழித்து விட்டு போனது. ஆனால் நேற்றைய பூகம்பமானது நல்ல வேளையாக பெரும் சேதத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால் இரண்டு பூகம்பங்களுக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. 2004 ல் ஏற்பட்ட பூகம்பமும், நேற்று முன்தினம் ஏற்பட்ட பூகம்பமும் சுமத்ராவின் மேற்கு கடல் பகுதியில்தான் ஏற்பட்டன. அதாவது இரண்டுமே ஒரே பகுதியில்தான் ஏற்பட்டுள்ளன. 

2004 ம் ஆண்டு ஏற்பட்ட பூகம்பத்தின் அளவு முதலில் 8.9 ரிக்டர் அளவு என்று கூறப்பட்டது. பின்னர் இது 9.1 ரிக்டராக திருத்தப்பட்டது. நேற்று முன்தினம் ஏற்பட்ட பூகம்பமானது முதலில் 8.9 ஆக கூறப்பட்டது. பின்னர் இது 8.7 என குறைக்கப்பட்டது. 2004 ம் ஆண்டு ஏற்பட்ட பூகம்பமானது கடலுக்கு அடியில் 33 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது. நேற்று முன்தினம் ஏற்பட்ட பூகம்பமானது 30 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது. இரண்டுக்கும் வித்தியாசம் வெறும் 3 கிலோ மீட்டர் ஆழம்தான். ஆனால் இரண்டும் ஏற்படுத்திய விளைவுகள் மிக பெரியவை. 

2004 ல் ஏற்பட்ட பூகம்பத்தால் பெரிய அளவில் சுனாமி பேரலைகள் எழுந்தன. இதனால் 14 நாடுகளை சேர்ந்த 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். பல லட்சம் பேர் வீடு, வாசல், உறவுகளை இழந்தனர். இந்த அளவுக்கு சேதம் ஏற்பட முக்கிய காரணம் சுனாமிதான். 2004 ம் ஆண்டு ஏற்பட்ட பூகம்பத்தின் போது டெக்ட்ரானிக் பிளேட் எனப்படும் பாறை தட்டுகள் மேலும் கீழுமாக செங்குத்து திசையில் நகர்ந்ததே இந்த அபாயகரமான சுனாமிக்கு காரணம். அதே  சமயம் நேற்று முன்தினம் ஏற்பட்ட பூகம்பத்தின் போது பாறை தட்டுக்கள் பக்கவாட்டில் நகர்ந்துள்ளன. இதனால்தான் பெரிதாக வந்த பூகம்பம் புஸ்வானமாகி போய் விட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்