முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

``108'' ஆம்புலன்ஸ் மூலம் பணம் பட்டுவா - பா.ஜ.க.

சனிக்கிழமை, 26 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, மார்ச். 25​- செயற்கை மின்வெட்டை பயன்படுத்தி 108 ஆம்புலன்ஸ் மூலம் பணம் பட்டுவாடா செய்யப்படுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ஜ.க. வலியுறுத்தியுள்ளது. தமிழக பா.ஜனதா தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:​ தி.மு.க. தலைவர் கருணாநிதி வாகன சோதனை செய்து பொது மக்களையும் வியாபாரிகளையும் அவதிக்குள்ளாக்குவதாக அறிக்கை விடுத்துள்ளார். பொது மக்களும் வியாபாரிகளும் கொண்டு செல்லும் பணத்திற்கு ஆவணம் வைத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லும் அதிகாரிகள் அவர்களை துன்புறுத்தாது தங்கள் கடமையை செய்ய பாரதீய ஜனதா கட்சி கேட்டுக் கொள்கிறது. 

கருணாநிதியும் ஆளும் கட்சியும் 108 ஆம்புலன்ஸ் சேவையை தவறாக பயன்படுத்தி வாக்காளர்களுக்கான பண பட்டுவாடாவுக்கான பணத்தை ஒருசில அதிகாரிகள் துணையோடு கடத்துவதாக தெரியவந்துள்ளது. 

அதுமட்டுமின்றி ஏற்கனவே அரசின் கையாலாகாத தனத்தால் ஏற்பட்ட மின்வெட்டை பயன்படுத்தியும், மேலும் வேண்டும் என்றே மின்வெட்டை ஏற்படுத்தியும் இருளில் தமிழகம் மூழ்கியுள்ள நேரத்தில் வாக்குகளை கவர பணமும், இலவச பொருட்களும் கடத்தப்படுகிறது. எனவே தேர்தல் கமிஷன் 108 ஆம்புலன்ஸ் வண்டிகளை முழுவதுமாக சோதிக்க வேண்டும் என்றும், மின்வெட்டை உடனடியாக தேர்தல் முடியும் வரையாவது nullக்க வேண்டும் என்றும் பாரதீய ஜனதா கட்சி கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறி உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்