முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இங்கிலாந்து பிரதமர் கேமரூன் நேற்று மியான்மர் பயணம்

சனிக்கிழமை, 14 ஏப்ரல் 2012      உலகம்
Image Unavailable

 

யாங்கூன், ஏப். - 14 - தெற்காசிய நாடுகளில் இரும்புத்திரை நாடாக இருந்து வந்த மியான்மருக்கு இங்கிலாந்து பிரதமர் கேமரூன் நேற்று பயணம் மேற்கொண்டது ஒரு வரலாற்று பதிவாக கருதப்படுகிறது.  ராணுவ ஆட்சியால் மேற்குலக நாடுகளால் தொடர்பு கொள்ள முடியாத நாடாக மியான்மர் இருந்து வந்தது. ஆங்சாங் சூகி தலைமையில் ஜனநாயகம் கோரி நடத்தப்பட்ட கிளர்ச்சிகள் ஒருவழியாக முடிவுக்கு வந்த நிலையில் முழுமையான ஜனநாயக நாடாக மியான்மர் பரிணமித்தால் அத்தனை பொருளாதார தடைகளையும் நீக்க தயாராக இருப்பதாக மேற்குலக நாடுகள் தெரிவித்திருந்தன. இந்நிலையில் அண்மையில் சூகி உள்ளிட்டோர் போட்டியிட்ட மினி தேர்தலில் சூகியின் கட்சி பெருவாரியாக வென்றது.  இதை தொடர்ந்து ஜனநாயக காற்றை மியான்மரும் சுவாசிக்க தொடங்கியிருந்தது. இந்நிலையில் இங்கிலாந்து பிரதமர் கேமரூன் நேற்று மியான்மர் சென்றார். அவர் முன்னாள் ராணுவ தளபதியும், மியான்மர் அதிபருமான தியான் சென்னை சந்தித்து பேசினார். இதே போல் ஆங்சாங் சூகியையும் அவர் சந்தித்து பேசினார். கேமரூனின் இப்பயணத்தின் மூலம் மியான்மர் மீதான பொருளாதார தடைகள் முழுமையாக விலக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. 1948 ம் ஆண்டு மியான்மர் விடுதலை பெற்ற பிறகு இங்கிலாந்து பிரதமர் ஒருவர் அந்நாட்டுக்கு பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago