முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிலி நாட்டில் நேற்று சக்திவாய்ந்த நில நடுக்கம்

புதன்கிழமை, 18 ஏப்ரல் 2012      உலகம்
Image Unavailable

சாண்டியாகோ, ஏப்.- 18 - சிலி நாட்டில் நேற்று சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவையில் 6.5 ஆக பதிவாகியுள்ளது. தலைநகர் சாண்டியாகோ மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் குலுங்கின. இதையடுத்து மக்கள் தங்கள் வீடுகளைவிட்டு அலறியடித்துக்கொண்டு பீதியில் வெளியே ஓடிவந்தனர். இந்த நிலநடுக்கக்தையொட்டி சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. இருந்தாலும் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தை அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் உறுதி செய்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் எந்த சேதமும் ஏற்படவில்லை என்று சிலி நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த பூமி அதிர்ச்சியை தொடர்ந்து சாண்டியாகோ நகரில் பல இடங்களில் மின்சாரம், டெலிபோன் சேவைகள் துண்டிக்கப்பட்டன. உயிர்ச்சேதம் குறித்தோ பொருட்சேதம் குறித்தோ தங்களுக்கு எந்த தகவலும் வரவில்லை என்று சிலி நாட்டின் தேசிய அவசர நிலை பிரிவு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சிலி நாடு அடிக்கடி பூகம்பம் ஏற்படும் மண்டலத்தில் உள்ளது. கடந்த மார்ச் மாதம் 25 ம் தேதி சிலி நாட்டின் மத்திய பகுதியை 7.1 என்ற அளவுள்ள பூகம்பம் தாக்கியது. ஆனால் அதில் பெரும் சேதம் எதுவும் ஏற்படவில்லை. இதற்கு முன்பும் இந்த நாட்டில் அடிக்கடி பூகம்பங்கள் ஏற்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago