முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முல்லைத் தீவு மருத்துவமனைக்கு இந்தியா உதவி

வெள்ளிக்கிழமை, 20 ஏப்ரல் 2012      இந்தியா
Image Unavailable

 

கொழும்பு, ஏப்.20 - இலங்கையின் வடக்கு மாகாணமான முல்லைத் தீவில் உள்ள பொது மருத்துவமனைக்கு ரூ. 3.6 கோடி மதிப்புள்ள உபகரணங்களை இந்திய எம்.பிக்கள் குழுவினர் வழங்கினர். முல்லைத் தீவில் 150 படுக்கை வசதிகள் கொண்ட பொது மருத்துவமனையை இலங்கை சென்றுள்ள இந்திய எம்.பிக்கள் குழுவின் தலைவர் சுஷ்மா சுவராஜ் திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து மேலும் 100 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனை அமைப்பதற்கு தேவையான உதவிகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது. மக்களை சுற்றி ராணுவம் எப்போதும் இருப்பதால், தாங்கள் நனஅறாக இருப்பதாக அவர்கள் தெரிவித்தாலும் கூட அவர்களின் முகத்தில் பயம் தெரிகிறது என்று காங்கிரஸ் எம்.பி. கிருஷ்ணசாமி தெரிவித்தார். 

முல்லைத் தீவு பகுதிகளின் நிலங்களில் உள்ள கண்ணி வெடிகளை அகற்றுவதற்கு மட்டும் 15 ஆண்டுகளாகும் என இந்திய குழுவினர் தெரிவித்ததாக கம்யூனிஸ்டு எம்.பி. ரங்கராஜன் தெரிவித்தார். திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு கூட ராணுவத்திடம் அனுமதி வாங்க வேண்டியதுள்ளது என்று சில மக்கள் வருத்தப்பட்டதாக ரங்கராஜன் மேலும் தெரிவித்தார். அப்பகுதியில் உள்ள தமிழர்களுக்கு இந்திய எம்.பி.க்கள் குழுவினர் சைக்கிள்களை வழங்கினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்