முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈழத் தமிழர்களுக்கு அதிகாரம்: பேச்சுக்கே இடமில்லையாம்

சனிக்கிழமை, 21 ஏப்ரல் 2012      உலகம்
Image Unavailable

 

கொழும்பு, ஏப். 22  - இலங்கை போரினால் இடம்பெயர்ந்த ஈழத் தமிழர்கள் இன்னமும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான உண்மை நிலவரங்களை அறிந்து இலங்கைக்கு அறிவுறுத்தல் செய்யவே இந்திய எம்.பி.க்கள் குழு இலங்கை சென்றுள்ளது. இந்திய எம்.பி.க்கள் குழு தமிழர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முழுமையான ஆய்வு எதையும் செய்து விடக் கூடாது என்பதில் சிங்கள ராணுவம் தீவிரமாக இருந்தது. தமிழர்கள் மறு குடியேற்றம் செய்த பகுதிகள் மற்றும் தமிழர்களுக்கு தொழில் பயிற்சி அளிக்கப்படும் பகுதிகள் ஆகியவற்றுக்கு மட்டுமே இந்திய எம்.பிக்கள் குழுவை சிங்கள ராணுவம் அழைத்து சென்றது. 

இந்நிலையில் தமிழர்கள் பெரும்பான்மையாக உள்ள வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு நிலம் மற்றும் காவல் அதிகாரங்களை வழங்கும் பேச்சுக்கே இடமில்லை. அதற்கு நாங்கள் தயாராகவும் இல்லை என்று இந்திய எம்.பி.க்கள் குழுவிடம் இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய எம்.பிக்களிடம் இலங்கை அரசின் பிரதிநிதிகள் கூறுகையில், 

இந்திய மாநிலங்களில் அமலில் உள்ள போலீஸ் அதிகாரங்களை போன்று இலங்கையின் மாகாணங்களுக்கு வழங்க முடியாது. இவ்வாறு போலீஸ் அதிகாரங்களை வழங்குவதால் மத்திய அரசாங்கம் பல்வேறு நெருக்கடிகளை எதிர்நோக்க கூடும் என்று இலங்கை அரசு கூறியுள்ளதாம். இலங்கை அரசின் இந்த முடிவு இந்திய எம்.பிக்கள் குழுவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago