முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சியாசின் பகுதியில் பாக். படையை வாபஸ் பெற முடியாது

சனிக்கிழமை, 21 ஏப்ரல் 2012      உலகம்
Image Unavailable

 

லாகூர்,ஏப்.22 - இமயமலையில் உள்ள சியாசின் பனிப்பிரதேசத்தில் இருந்து பாகிஸ்தான் படையை ஒருதலைப்பட்சமாக வாபஸ் பெற முடியாது என்று அந்த நாட்டு அதிபர் ஆசிப் அலி ஜர்தாரி தெரிவித்துள்ளார். இந்தியாவின் வடக்கே இமயமலைப்பகுதியில் சியாசின் பகுதி உள்ளது. இது பனிப்பிரதேசமாகும். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் இது உள்ளது. இந்த பகுதியில் ஒரு சிறு பகுதி யாருக்கு சொந்தம் என்பதில் இந்தியாவுக்கும் சியாசினுக்கும் இடையே பிரச்சினை இருந்து வருகிறது. இந்த பகுதியில் இருநாட்டு படைகளும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளன. 

இந்தநிலையில் பாகிஸ்தானில் நடைபெற்ற தனது கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சியின் ஊழியர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் அதிபர் ஆசிப் அலி ஜர்தாரி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில் சியாசின் பகுதியில் இருந்து பாகிஸ்தான் ஒருதலைப்பட்சமாக படையை வாபஸ் பெற முடியாது. அங்கி நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் இந்திய படையும் வாபஸ் வாங்கினால் பாகிஸ்தான் படையை வாபஸ் பெற தயார் என்றார். சியாசின் பகுதியில் பனி அதிகமாக இருப்பதால் பாகிஸ்தான் படையினர் பல பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்கள். அதேமாதிரி இந்திய படைகளுக்கும் பிரச்சினை உள்ளது. உலகத்திலேயே மிகவும் கடினமான சண்டை பகுதி சியாசின்தான் என்பதில் சந்தேகம் இல்லை. அங்கு நிலவும் கடும் குளிர் குறித்து எங்களுக்கு நன்றாகவே தெரியும். அந்த பகுதியில் உலகத்திலேயே இல்லாத அளவுக்கு சரிவுப்பாறைகள் உள்ளன. அதேசமயத்தில் சியாசின் பகுதியில் இருந்து படைகளை வாபஸ் வாங்க இரு தரப்பினரும் ஒப்புக்கொள்ள வேண்டும் என்று ஜர்தாரி மேலும் கூறினார். இந்தியாவுடன் உள்ள அனைத்து பிரச்சினைகளுக்கும் பேச்சுவார்த்தை மூலமே தீர்த்துக்கொள்ள பாகிஸ்தான் விரும்புகிறது என்றும் ஜர்தாரி மேலும் கூறினார். 

கடந்த 2 வாரங்களுக்கு முன்பு சியாசின் பகுதியில் பனிக்கட்டிகள் சரிந்து விழுந்ததில் பாகிஸ்தான் படையை சேர்ந்த 150 பேர் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago