முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாணவர்களுக்கு விசா கட்டுப்பாடு

வெள்ளிக்கிழமை, 27 ஏப்ரல் 2012      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, ஏப். 27 - பிரிட்டன் சென்று படித்த பின் அங்கேயே தங்கி பணியாற்ற விரும்பும் மாணவர்களுக்கு விசா வழங்க அந்நாடு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இது தொடர்பான தகவல் மக்களவையில் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பான கேள்விக்கு மத்திய மனிதவள மேம்பாட்டு துறை இணை அமைச்சர் டி. புரந்தேஸ்வரி எழுத்துப்பூர்வமாக அளித்த பதில் வருமாறு: 

முன்பு பிரிட்டன் செல்லும் இந்திய மாணவர்கள் படிப்பு முடித்த பின் அங்கேயே தங்கி பணியாற்ற அனுமதி வழங்கப்பட்டு வந்தது. இந்த நடைமுறை ஏப்ரல் மாதம் 6 ம் தேதியுடன் முடிவுக்கு வந்து விட்டது. எதிர்காலத்தில் பிரிட்டன் செல்லும் மாணவர்கள் அங்கு பணியாற்றவும் விரும்பினால் தாங்கள் படிப்புக்காக பெற்றுள்ள விசா காலாவதியாகும் முன்பே தங்களுக்கு பணி அளிக்கும் நிறுவனத்திடம் இருந்து சான்றிதழ் பெற்று அளிக்க வேண்டும். அப்போது மட்டுமே அவர்கள் அங்கு படிப்பு முடித்து பணியாற்ற முடியும் என்று தெரிவித்தார். தங்கள் நாட்டில் வந்து பணியாற்றும் வெளிநாட்டு மாணவர்களை கட்டுப்படுத்தும் வகையில் பிரிட்டன் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்