முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜப்பான் வெளியுறவுத்துறை அமைச்சர் நாளை வருகை

சனிக்கிழமை, 28 ஏப்ரல் 2012      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, ஏப்.28 - ஜப்பான் வெளியுறவுத்துறை அமைச்சர் கோய்ச்சிரோ ஜெம்பா இரண்டு நாள் அரசு முறை பயணமாக நாளை இந்தியா வருகிறார். இந்தியாவுக்கும் ஜப்பானுக்கும் இடையே நீண்ட காலமாக நல்லுறவு நீடித்து வருகிறது. இரு நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களும் ஆண்டுதோறும் இரு தரப்பு முக்கிய பேச்சுவார்த்தைகளை நடத்துவது வழக்கம் அதன்படி இந்த ஆண்டிற்கான இந்த இரு வெளியுறவுத்துறை அமைச்சர்கள் வருடாந்திர முக்கிய பேச்சுவார்த்தை டெல்லியில் நடைபெற உள்ளது. 

மேலும் இந்தியாவுக்கும் ஜப்பானுக்கும் இடையே பொருளாதார உறவுகள் தொடர்பான முதல் பேச்சுவார்த்தையும் டெல்லியில் நடக்க இருக்கிறது.

இவற்றில் கலந்து கொள்வதற்காக ஜப்பான் வெளியுறவுத்துறை அமைச்சர் கோய்ச்சிரோ ஜெம்பா இரண்டு நாள் அரசு முறை பயணமாக நாளை ( 29 ம் தேதி )  புதுடெல்லி வருகிறார்.

இந்தியாவின் சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா பங்கேற்க இருக்கிறார்.

இவர்கள் இருவரும் பல்வேறு அம்சங்கள் குறித்து  ஆக்கப்பூர்வ பேச்சுவார்த்தைகளை நடத்த உள்ளனர்.

குறிப்பாக ஆக்கப்பூர்வ அணு சக்தி ஒத்துழைப்பு குறித்து இவர்கள் முக்கியமாக விவாதிப்பார்கள்.

ஆக்கப்பூர்வ அணு சக்தி ஒத்துழைப்பு தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட இருக்கிறது. இது குறித்து இரு  அமைச்சர்களும் பேச்சு நடத்துவார்கள்.

இரு தரப்பு உறவுகள், உலக பங்களிப்பு, உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்தும் இரு அமைச்சர்களும் விவாதிப்பார்கள் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும் ராணுவம், முதலீடுகள் குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.

பொருளாதார உறவுகளை பொறுத்த வரையில் ஆசியாவின் இரு பெரும் நாடுகளான இந்தியாவும் ஜப்பானும் வர்த்தக உறவுகள் குறித்தும் பேச்சு நடத்த உள்ளன.

இந்த பேச்சுவார்த்தை விரிவான பொருளாதார ஒப்பந்தத்தின் கீழ் நடத்தப்பட இருக்கிறது.

இரு நாடுகளுக்கும் இடையேயான பொருளாதார கூட்டத்தில் இரு நாடுகளின் முக்கிய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளும் பங்கேற்பார்கள்.

இந்த பயணத்தின் போது ஜப்பான் அமைச்சர் கோய்ச்சிரோ ஜெம்பா இந்திய தலைவர்கள் சிலரையும் சந்தித்து பேசுவார்.

இவரது இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்