முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிலானிக்கு தண்டனை விதித்திருப்பது பாக். விவகாரம்

சனிக்கிழமை, 28 ஏப்ரல் 2012      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத்,ஏப்.28 - பாகிஸ்தான் பிரதமர் கிலானிக்கு கோர்ட்டு தண்டனை விதித்திருப்பது அந்தநாட்டு விவகாரம் என்று அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது. பாகிஸ்தானுக்கும் அமெரிக்காவும் இடையே உறவில் ஏற்பட்டுள்ள விரிசலை சரிக்கட்டும் முயற்சியில் இருநாடுகளும் ஈடுபட்டுள்ளன. இந்த விஷயம் தொடர்பாக அமெரிக்க நாட்டு சிறப்பு தூதர் மார்க் கிராஸ்மேன் இஸ்லாமாபாத்திற்கு வந்துள்ளார். இவர் பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரசா கிலானியை நேற்று சந்தித்து பேசினார் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரி விக்டோரியா நுலாந்து நேற்று வாஷிங்டன்னில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில் பாகிஸ்தான் பிரதமர் கிலானிக்கு அந்த நாட்டு சுப்ரீம்கோர்ட்டு அரைநிமிட நேரம் தண்டனை வழங்கி தீர்ப்பு அளித்தது. இதனால் பதவியை இழக்கும் நிலை கிலானிக்கு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நுலாந்திடம் கேட்டதற்கு அது பாகிஸ்தான் நாட்டு உள்விவகாரமாகும் என்று சுருக்கமாக பதில் அளித்தார். ஆனால் இதுபோன்ற பிரச்சினைகளுக்கு பாகிஸ்தான் சட்டப்படி அந்த நாட்டு அரசு விரைவில் தீர்வுகாண வேண்டும் என்று நுலாந்து தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்