முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா - பாகிஸ்தான் உள்துறை செயலாளர்கள் இன்று பேச்சுவார்த்தை

திங்கட்கிழமை, 28 மார்ச் 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, மார்ச் - 28 - இந்திய - பாகிஸ்தான் உள்துறை  செயலாளர்கள் இன்று டெல்லியில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.  இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே சுமூகமான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு கிட்டத்தட்ட  9 மாதங்கள் ஆகிவிட்டன.  அதன் பிறகு எந்த  பேச்சுவார்த்தையும் எந்த மட்டத்திலும் நடக்கவில்லை. வருகிற  30-ம் தேதி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில்   இந்தியாவும் பாகிஸ்தானும்  விளையாட இருக்கும் விறுவிறுப்பான தருணத்தில்  இவ்விரு நாடுகளின் உள்துறை  செயலாளர்கள் இன்று டெல்லியில் கூடி பேச்சு நடத்த உள்ளனர். இந்த சந்திப்பு அடுத்து நடைபெற இருக்கும் ஒரு முக்கிய பேச்சுவார்த்தைக்கு  வழி வகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய உள்துறை செயலாளர் கோபால் கே.பிள்ளை, பாகிஸ்தான் உள்துறை செயலாளர்  சுவதாரி காமர்ஜாமன் ஆகியோர் இந்த கூட்டத்தில் பங்கேற்று பேசுகின்றனர். 

மும்பை தாக்குதலில் தொடர்புடைய பாகிஸ்தான் தீவிரவாத தலைவர்களை நீதியின் முன் நிறுத்துவதில் பாகிஸ்தானின் முழு ஒத்துழைப்பு தேவை  என்ற இந்தியாவின் வேண்டுகோள், காஷ்மீரில் தீவிரவாதிகளின் ஊடுருவல் உள்ளிட்ட இரு நாட்டு முக்கிய பிரச்சினைகள் குறித்து இந்த கூட்டத்தில விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பேச்சுவார்த்தை இன்று தொடங்கி  நாளையும்  நடைபெறும் என்று  அறிவிக்கப்பட்டுள்ளது.

மும்பை தாக்குதலை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில்  சற்று விரிசல் ஏற்பட்டிருந்த நிலையில் இப்போது மீண்டும் பேச்சுவார்த்தை நடப்பது முன்னேற்றமளிக்கும் நடவடிக்கையாக உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்