முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடைசி அணுமின் உலையையும் ஜப்பான் மூடியது: மக்கள்மகிழ்ச்சி

திங்கட்கிழமை, 7 மே 2012      உலகம்
Image Unavailable

டோக்கியோ, மே - 7 - ஜப்பானில் இயங்கி வந்த ஹொக்கொய்டோ அணுமின் நிலையம் பரமாரிப்புப் பணிக்காக மூடப்பட்டதைத் தொடர்ந்து அந்நாட்டின் 40 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக அணுமின்சாரமே இல்லாத நிலை அங்கு  உருவாகி உள்ளது.ஜப்பானில் சுனாமிப் பேரலை  ஏற்பட்டு பேரழிவைச் சந்தித்த பிறகு அணு உலைகளின் பாதுகாப்புக்காக அவற்றை மூடி பழுதுபார்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஜப்பானைப் பொறுத்தவரையில் ஒரு அணு உலை மூடப்பட்டால் உள்ளாட்சி அமைப்பின் அனுமதி பெற்ற பிறகே திறக்கப்பட வேண்டும். இதுவரை மூடப்பட்ட அணு உலைகள் திறக்கப்படவில்லை. பொதுமக்களின் கடும் எதிர்ப்பும் இதற்கு ஒரு காரணம். இந்நிலையில் ஹொக்கொய்டோவில் இயங்கி வந்த அணுமின் நிலையமும் நேற்று மூடப்பட்டது.  இதைத் தொடர்ந்து ஜப்பானில் அனைத்து அணுமின் நிலையங்களும் மூடப்பட்டு அணுமின்சாரம் இல்லாத ஒரு நிலை உருவானது. இதைக் கொண்டாடும் வகையில் தலைநகர் டோக்கியோவில் பல்லாயிரக்கணக்கானோர் ஊர்வலம் நடத்தினர். அவர்கள் தமது நாட்டில் அணு சக்திக்கு இடமில்லை என்ற பதாகைகளையும் ஏந்தியிருந்தனர். இருப்பினும் ஓஹி என்ற இடத்தில் உள்ள அணுமின் நிலையம் பாதுகாப்பானது என்பதால் அதனை மட்டுமாவது திறக்க ஜப்பான் அரசு முயற்சித்து வருகிறது. ஆனால் அதற்கும் கடும் எதிர்ப்பு நீடித்து வருகிறது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்