முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேசிய அரசில் சேர நேபாள கட்சி மறுப்பு

புதன்கிழமை, 9 மே 2012      உலகம்
Image Unavailable

 

காத்மண்டு, மே. 9  - நேபாளத்தில் பிரதமர் பாபுராம் பட்டராய் தலைமையிலான தேசிய அரசில் சேர மாட்டோம் என்று ஐக்கிய மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. எல்லா கட்சிகளும் மே 27 க்குள் தேசிய அரசில் சேர வேண்டும் என்று ஏற்கனவே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. மாவோயிஸ்டுகள் தலைமையிலான இந்த அரசு கருத்தொற்றுமை என்ற கோட்பாட்டுக்கே முரணானது என்பதால் சேர முடியாது என்று அக்கட்சி சார்பில் பிரதீப் கியாவாலி அறிவித்தார். 

புதிய அரசியல் சட்டம் ஏற்கப்படும் வரை பிரதமர் பதவியில் பட்டராய்தான் இருப்பார் என்பதால் தங்களால் சேர முடியாது என்று மேலும் அவர் தெரிவித்தார். தங்களுடைய கோரிக்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றால் பட்டராய் பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்றார். 

எல்லாம் கூடி வரும் நேரத்தில் இந்த முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளதே என்று நடுநிலையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். புதிய அரசு எப்படி இருக்க வேண்டும். மத்திய அரசுக்கு என்னென்ன அதிகாரங்கள், மாநிலங்கள் எத்தனை அமைய வேண்டும் என்பதில் கூட கட்சிகளுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் இருக்கும் போது இந்த பிரச்சினை முதல் சோதனையாக இருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்