முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெட்ரோலிய துறை பறிப்பு - மணி சங்கர் அய்யர் மறுப்பு

செவ்வாய்க்கிழமை, 29 மார்ச் 2011      இந்தியா
Image Unavailable

 

லக்னோ,மார்ச்.29 - அமெரிக்காவின் வற்புறுத்தலால்தான் என்னிடம் இருந்து பெட்ரோலியத்துறை பறிக்கப்பட்டது என்று விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள தகவலை முன்னாள் மத்திய அமைச்சர் மணி சங்கர் அய்யர் அடியோடு மறுத்துள்ளார். 

அமெரிக்காவில் இருந்துகொண்டு செயல்பட்டுவரும் விக்கிலீக்ஸ் இணையதளம் உலக நாடுகளின் ரகசியங்களை வெளியிட்டு வருகிறது. இந்தியாவைப்பற்றியும் பல தகவல்களையும் விக்கிலீக்ஸ் வெளியிட்டு வருகிறது. கடந்த முறை மத்தியில் பிரதமர் மன்மோகன் சிங் அரசு மீது நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. இதில் வெற்றிபெற எம்.பி.க்களுக்கு பிரதமர் மன்மோகன் சிங் மூலம் பணம் பட்டுவாடா செய்யப்பட்டது என்றும் பாரதிய ஜனதா கட்சியின் இந்துத்துவா கொள்கையானது சந்தர்ப்பவாத கொள்கை என்று அருண்ஜெட்லி கூறியதாகவும் விக்கிலீக்ஸ் தகவலை வெளியிட்டிருந்தது. இது பாராளுமன்றத்தில் பெரும் பிரச்சினையை எழுப்பியது. 

இந்தநிலையில் மேலும் ஒரு தகவலை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது. அதாவது கடந்த முறை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் இடம் பெற்றிருந்த மணி சங்கரிடம் இருந்து பெட்ரோலிய துறை பறிக்கப்பட்டு முரளி தியோராவிடம் கொடுக்கப்பட்டது. இதற்கு அமெரிக்காவின் வற்புறுத்தல்தான் காரணம் என்று விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது. 

இதை மணிசங்கர் அய்யர் அடியோடு மறுத்துள்ளார். என்னிடம் இருந்து பெட்ரோலிய துறை பறிக்கப்பட்டதற்கு அமெரிக்காவின் வற்புறுத்தல் அல்ல. ஆனால் என்னிடம் பெட்ரோலிய துறை பறிக்கப்பட்டதற்கு அமெரிக்கா சந்தோஷம் அடைந்தது என்று அய்யர் கூறியுள்ளார். ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு முதன் முதலாக பதவி ஏற்றபோது நான் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சராக இருந்தேன். சிறிது காலம் கழித்து என்னிடம் பெட்ரோலியத்துறை கூடுதலாக கொடுக்கப்பட்டது. என்னமோ தெரியவில்லை. அதிலிருந்து சுமார் 20 மாத காலம் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படவில்லை. அதிர்ஷ்டவசமாக பெட்ரோலியத்துறை என்னிடம் இருந்தது. அந்த நேரத்தில் ஈரானில் இருந்து பாகிஸ்தான் வழியாக குழாய் மூலம் இந்தியாவுக்கு கியாஸ் கொண்டு வர நான் பெரும் முயற்சி செய்து கொண்டேன். இதற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்தது என்று நேற்று லக்னோவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த மணி சங்கர் அய்யர் மேலும் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்